சர்னு வெயிட் குறைக்கணுமா? தொங்கும் ஊளைச்சதைக்கு இது போதுமே.. டயட்டே வேணாம்.. சூப்பர் டிப்ஸ் பாருங்க
சென்னை: உடல் எடையை குறைக்க, பச்சை காய்கறிகளும், கீரைகளும், பழங்களும், முறையான உடற்பயிற்சியும், போதுமான தூக்கமும், நிம்மதியான மனநிலையும் கட்டாயம் தேவை. அதேசமயம், உணவில், சின்ன சின்ன விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய வெகுவாக குறைய உதவியாய் இருக்கும்.
அந்தவகையில், நிறைய நேரம் தூங்கினால் உடல் எடை குறையுமாம்.. அதாவது, தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, தூங்கும்போது உடல் எந்தவேலையும் செய்யமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம் என்கிறார். ஆனால், இரவு அல்லது பகல் நேரத்தில் அதிகமாக தூங்கினால் அது கப தோஷம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.
காய்கறிகள்: அதேபோல, தினம் ஒரு காய்கறி என்றில்லாமல், ஒரே நேரத்தில் 3 காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். இதனால் காய்கறிகளை நிறைய சாப்பிட தோன்றும்.. இதுபோலவே, பழங்களையும் அதிகமாக சாப்பிடலாம். ஆனால், ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு மிளகு தூள் சேர்த்த சூப் குடிக்கலாம். கெட்டியாக இல்லாமல், தண்ணீர்போல தயார் செய்து, சூப்களை குடிக்கலாம்.
நாம் பயன்படுத்தும் டம்ளர்கூட, சிறியதாக இல்லாமல், நீளமான மெல்லிய டம்ளராக வைத்து கொள்ள வேண்டுமாம். காரணம், டயட்டில் இருக்கும்போது, ஜூஸ், சோடா உட்பட மதுபானங்கள் அளவை எளிதாக குறைக்கலாம் என்கிறார்கள்.
அதேபோல, பச்சை காய்கறிகளையும், சாலட்களையும், வேக வைத்த காய்கறிகள், இறைச்சியையும் சாப்பிடலாம்... வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட பழகிக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கி, உடல் எடையும் குறையும்.
சரியான நேரம்: இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட்டு, குடிக்கும் நீரையும் சரியான அளவில் சரியான வெப்ப நிலையில் குடிக்க வேண்டும். முக்கியமாக வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், ஜீரணம் எளிதாகி, அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவும். அல்லது வெறும் சுடுநீருக்கு பதிலாக, சீரகத்தண்ணீர், லவங்கப்பட்டை தண்ணீர், சோம்பு தண்ணீர் போன்றவற்றை குடித்தால், அஜீரண கோளாறு ஏற்படாது.
முக்கியமாக தினமும் காலையில் 6 முதல் 10 டம்ளர் சூடான தண்ணீர் குடிக்கலாம்.. ஆனால், கொதிக்க கொதிக்க குடிக்க தேவையில்லை.. கொதிநிலை கொண்ட சூடான தண்ணீரானது, உணவுக்குழாய்களில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும். மேலும், சுவை மொட்டுக்களை எரித்து நாக்கிலும் காயத்தை ஏற்படுத்தி விடும். அதேபோல, சுடுநீரில் பச்சை தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாக குடிப்பதும் தவறு.. இதனால் கிருமிகள் கொஞ்சமும் அழியாது.
சுடுநீர்: தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு, ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க பழக்கப்படுத்தி கொள்ளலாம்.. அதிகமாக தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனை வரும்..
காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால்தான்.. அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.. தாகம் எடுத்தும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நீர்ச்சத்து குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.
அதனால், வெறும் தண்ணீர்தானே என்று நினைக்கக்கூடாது.. உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த தண்ணீரும் மிக முக்கிய காரணம்,
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications