நொச்சியிலை.. ஆஸ்துமாவை விரட்டும் அற்புத நொச்சி கீரை.. ஆயுசை கூட்டும் அருமையான மூலிகை இலைகள் இதுதான்
சென்னை: ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பேருதவி புரியக்கூடிய 2 வகையான கீரைகள் உள்ளன.. அவை என்ன? இவைகளுடன் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் என்னென்ன தெரியும்?
ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சில உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. முக்கியமாக, பால், காப், டீ போன்றவற்றை தவிர்த்துவிட்டு, மூலிகை இலைகளை கொண்டு, பானங்களை குடித்தால் மிகவும் நல்லது.

பால் வேண்டவே வேண்டாம் : கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி போன்ற இலைகளை சேர்த்து டீ போட்டு, தேன் கலந்து குடித்தால் நெஞ்சிலுள்ள சளி இளகி வெளியேறும்.. சுவாசப்பாதைகள் சீராகும்..
நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ, கிழங்கு வகைகள், எண்ணெய் உணவுகள், தயிர், போன்றவற்றை தவிர்த்துவிட்டு, புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி, அவல் உப்புமா இந்த மூன்று உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். மிளகு, பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை அதிகம் சேர்த்து சமைக்க வேண்டும்.. வாரம் 2 முறையாக தூதுவளை ரசம் வைத்து குடிக்கலாம்.. முருங்கைக்கீரையில் மிளகு தூள் சேர்த்து சூப் போல குடிக்கலாம்.
ஆஸ்துமா பிரச்சனை: ஆஸ்துமாவுக்கு நொச்சி இலைகள் பேருதவி புரிகின்றன.. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து, இந்த இலைகளுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, நெஞ்சு சளி கரைய ஆரம்பித்துவிடும். அல்லது குளிக்கும் வெந்நீரில், வேப்பிலையை போலவே, இந்த இலையையும் சேர்த்து குளித்து வரலாம்..
கடும் தலைவலி இருந்தாலும்கூட, இந்த இலைகளை, எரித்து அதன் புகையை சுவாசித்தாலே, தலைவலியும், தலைபாரமும் சேர்த்து குணமாகும்.. ஆஸ்துமாவைகூட இந்த இலைகள் விரட்டக்கூடியது என்பதால், மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை, நொச்சி இலைகளுடன் வைத்து மென்று தின்றாலே ஆஸ்துமா மெல்ல விலகும்.
முசுமுசுக்கை கீரை: முசுமுசுக்கைக் கீரையையும் சமையலில் சேர்த்து வரலாம்.. இந்தக்கீரை சளி, இருமல் சம்பந்தமான எல்லாத் பிரச்சனைகளை போக்க வல்லது. உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை, மற்றும் சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை இந்த கீரை நீக்கவல்லது. இதைத் தவிர இருமல், கபம், சளி மற்று சளி, இருமல் சேர்ந்த எல்லாத் தொல்லைகளையும் போக்கும்.
காசநோயால் அவதியுறுவோருக்கு இந்த முசுமுசுக்கை கீரை ஒரு வரப்பிரசாதமாகும். முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இது சுவாச சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. முசுமுசுக்கைக் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications