ஒரே இலை மேஜிக்.. முள்ளங்கி இலை சூப்பர்.. காலிபிளவர் இலையை மட்டும் கீழே போடாதீங்க.. ஆச்சரிய இலைகள்
சென்னை: நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் சத்துக்கள் உள்ளதென்றாலும், அந்த காய்கறியிலுள்ள இலைகளிலும் சத்துக்கள் உள்ளன.. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
பீட்ரூட்டை எடுத்துக் கொண்டால், பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அந்த கிழங்கின் இலைகளிலும் இருக்கிறது.. பீட்ரூட்டின் சுவை இனிப்பாக இருந்தாலும், இதன் இலைகள் ரத்த சர்க்கரையை குறைக்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.. இந்த இலைகள், கல்லீரலின் கொழுப்பையும் கரைக்கின்றன. ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.

பீட்ரூட்: அஜீரண கோளாறுகள் இருப்பவர்கள், பீட்ரூட் கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம்.. இந்த கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரக்கூடியது.. குறைவான கலோரி உணவான இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பீட்ரூட் கீரைகளில் அதிகம் காணப்படும் நரம்புகளில்தான், கரோட்டின் என்ற உயிர்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கரோட்டின் வைட்டமின் A சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. அதனால்தான், இதனை வைட்டமின் Aயின் சேமிப்புப் பட்டறை என்று அழைக்கிறார்கள். அதனால், பீட்ரூட்டை இலைகளுடன் சேர்த்தே வாங்குவதுதான் இனி நல்லது.
முள்ளங்கி கீரை: முள்ளங்கியை எடுத்துக்கொண்டால், முள்ளங்கியில் இருப்பதைவிட 6 மடங்கு, வைட்டமின் C, முள்ளங்கி கீரையில் இருக்கிறதாம். உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன், நோய்களை அண்ட விடாமல் இந்த இலைகள் தடுக்கின்றன. இதனால், கல்லீரல் மட்டுமல்ல, சிறுநீரகம், நுரையீரல் இதயம், கண்கள் என உடலுறுப்புகள் சிறப்பாக செயலாற்ற இந்த கீரை பேருதவி புரிகிறது.
சுவாசப்பாதையில் உள்ள தொற்றுகளை அகற்றுவதால் சிறுநீரகம் காக்கப்படுகிறது.. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு வேளையாவது, இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
கல்லீரல்: இதனால் கல்லீரல் காக்கப்படுகிறது.. நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், இதயம் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் ஒரு முறையாவது முள்ளங்கி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது சருமத்துக்கும் மிகவும் நல்லது.
முட்டைகோஸ் இலைகளை பொறுத்தவரை, சருமத்திற்கு மிகவும் நல்லது. சருமம் பொலிவிழந்து காணப்பட்டால், இந்த இலைகளில் ஃபேஸ் மாஸ்க் போல் பயன்படுத்தலாம்.. அதேபோல, தலைமுடி பலவீனமாக இருந்தால், இந்த இலைகளை மிக்சியில் அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து, தலைமுடியின் வேர்களில்படும்படி தடவி, ஊறவைத்து அலசினால் போதும்.. தலை முடி வறட்சி நீங்கும்.. பொடுகுத்தொல்லையும் இருக்காது.
வளரும் குழந்தைகள்: காலிஃபிளவர் இலைகளிலும், நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. இந்த இலைகளில் நிறைய புரோட்டீன், மினரல்ஸ் உள்ளன. அதாவது, காலிஃபிளவரில் உள்ளதை விட, காலிஃபிளவர் இலைகளில் டபுள் மடங்கு புரோட்டீன்கள் இருக்கிறதாம்.. இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் A, ஆண்டிஆக்ஸிடன்ஸ், உள்ள காலிஃபிளவர் இலைகளை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி தர வேண்டும்.
பூசணியிலையை பொறுத்தவரை,சர்க்கரை நோயாளிகளுக்கு பேருதவி புரிகின்றன.. ஹைப்போ கிளைசெமிக் விளைவு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது..
தாய்மார்கள்: நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தாலே, புற்றுநோய் அண்டாது..விந்தணுக்களில் குறைபாடு பிரச்சனைகளை போக்குவதுடன், விந்தணுக்களின் வளத்தையும் அதிகரிக்க செய்து, குழந்தை பாக்கியத்தை தருகிறது இந்த இலைகள்... கருவுறுதல் திறனை அதிகரிக்க பெண்கள் இந்த இலைகளை சமையலில் சேர்த்து கொள்ளலாம்.. இளம்தாய்மார்களுக்கு பால் சுரக்க இந்த இலைகள் உதவுகின்றன..!!












Click it and Unblock the Notifications