வில்வ இலை.. சர்க்கரை நோயை விரட்டும் வில்வ இலைகள்.. மஞ்சள் கிழங்கு இருக்கா? ஏகப்பட்ட ஆச்சரியங்கள்
சென்னை: தமிழர்களின் வாழ்வியலில் தவிர்க்க முடியாதது வில்வ மரம்.. ஏராளமான மருத்துவ சக்திகளை கொண்ட, இந்த வில்வ இலைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
வில்வ மரத்தின் இலை மட்டுமல்ல, இதன் காய், பழம், பூக்கள், வேர், கொழுந்து, தளிர்கள் என அனைத்துமே மருத்துவ சக்தி கொண்டது. வில்வ மர தளிர்கள், கண்களை காக்கக்கூடியது..

மர பாகங்கள்: இந்த மரத்தின் காய்களை, காயவைத்து எரித்து தூளாக்கி, பற்களை தேய்க்க உபயோகிக்கலாம். இந்த மரத்தின் பூக்கள், வாய் துர்நாற்றம், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றை போக்கக்கூடியது.. இந்த மரத்தின் பழங்கள், உடலுக்கு வலுவை கொடுக்கக்கூடியது. இந்த பழத்தில் சர்பத் செய்து குடிப்பார்கள்.. இது இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நன்மை செய்யக்கூடியது.
இந்த மரத்தின் பட்டை காய்ச்சலை போக்கக்கூடியது. எனினும், இந்த வில்வ இலைகளே பெரும்பாலான பலன்களை வாரி வழங்குகிறது.
நோய்கள்: வில்வ இலைகளில் நிறைய ஆன்டி பயாடிக் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இலைகள் மிகவும் நல்லது.. இந்த இலையில் டீ போட்டு குடித்தால், ரத்த சர்க்கரை கட்டுப்படும்.. உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை அழிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்க உதவுகின்றன-.
வில்வ இலைகள், மலச்சிக்கலை தீர்த்து, குடல் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், வில்வ இலையை கொதிக்க வைத்து மிளகுத்தூள் சேர்த்து தேன் கலந்து குடித்தாலே மலச்சிக்கல் தீரும். வயிற்றிலுள்ள பூச்சுக்களும் வெளியேறிவிடும்.. கடும் தலைவலி வந்தால், இந்த இலைகளை நசுக்கி, அந்த சாறில் நெற்றியில் பற்று போட்டாலே நிவாரணம் கிடைக்கும்..
சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்பை உறுதிசெய்வதில், இந்த வில்வ இலைகளின் பங்கு அபரிமிதமானது.. இந்த இலையுடன் மஞ்சள் கிழங்கையும் சேர்த்து அரைத்து தூளாக்கி வைத்துக்கொண்டால், சரும பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சிரைப்பு பிரச்சனை இருப்பவர்கள், இரவில் மண் பானை நீரில், வில்வ இலைகளை போட்டுவைத்து, மறுநாள் காலையில், வெறும் தண்ணீரை குடித்தாலே, அலர்ஜி நீங்கும்..
காது நோய்கள் ஏற்பட்டால், நல்லெண்ணெயில் இந்த வில்வ இலையை சேர்த்து காய்ச்சி, காது நோய்களுக்கு பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு இப்படி எந்த தொந்தரவு சருமத்தில் ஏற்பட்டாலும் வில்வ இலை + வேப்பிலை + கல் உப்பு + மஞ்சள் தூள் என அனைத்தையும் கலந்து பூசிவந்தாலே பலன் கிடைக்கும்.
வில்வ இலைகள்: இந்த வில்வ இலையால் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.. யாராக இருந்தாலும், வில்வ இலையை நிறைய சாப்பிட முடியாது.. வில்வ இலையை அதிகம் சாப்பிடுவதால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படும்.
அதேபோல, வில்வ இலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. காரணம், இதிலிருக்கும் சத்துக்கள் கர்ப்பம் உருவாவதை தடுப்பதாக சொல்கிறார்கள்.. அதனால் கர்ப்பிணிகள் இதை தவிர்க்கலாம். அதேபோல, திருமணமான புதுமண தம்பதிகளும் இந்த இலையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் பண்புகள் இதில் இருப்பதாக சொல்கிறார்கள்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications