அகத்தி பூ.. அள்ள அள்ள ஆச்சரியம்..அகத்திப்பூக்களின் பவுடர்..நோய்களை அசால்ட் செய்துவிடும்...அகத்திப்பூ
சென்னை: 2 வாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையையும், வாரத்துக்கு ஒருமுறை அகத்திப்பூக்களையும் சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடியே அணிய தேவையில்லையாம். அந்த அளவுக்கு கண்பார்வை பிரகாசமாகும் என்கிறார்கள்.
அகம் + தீ + கீரை = அகத்திக்கீரை.. அதாவது உடம்பிலுள்ள சூட்டை தணிப்பதால், இதற்கு அகத்திக்கீரை என்று பெயராம்.. 10 டம்ளர் பாலிலும், 5 முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச்சத்து, ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளது.

இரும்புச்சத்து: இரும்புச்சத்து அதிகமுள்ள கீரையாகும்.. எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதித்தன்மையை தரக்கூடியது.. குழந்தை பெற்ற பெண்களுக்குகூட இந்த அகத்திக்கீரையை சமைத்து தருவார்கள். காரணம், தாய்ப்பால் பெருகும்.. அகத்திக்கீரை சாப்பிட்டால், பால் வளம் பெருகும் என்பதால்தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கும் தீவனமாக தரப்படுகிறது..
அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மைகொண்டது. அதனால், சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. அதேபோல, சிக்கனுடன் சேர்த்து இந்த கீரையை சாப்பிடக்கூடாது.. மது அருந்திவிட்டும் இந்த கீரையைச் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடுமாம்.
அகத்திப்பூக்கள்: அகத்திக்கீரையைப்போலவே, பெருத்த மருத்துவ குணம் நிறைந்தது அகத்திக்கீரையின் பூக்களாகும்.. சிவப்பு, மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைத்தாலும், சிவப்பு அகத்திப்பூ சுவையாகவும், சத்துகள் நிறைந்ததாகவும் உள்ளன..
மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. இந்த பூக்களில் நிறைய கால்சியம் நிறைந்திருக்கிறது.. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த பூக்களை சமைத்து தருவதால், அவர்களது பற்களும், எலும்புகளும் பலமாகும்.. மிகவும் குளர்ச்சியை தரக்கூடிய இந்த பூக்களில், பொரியல், கூட்டு போல சமைத்து சாப்பிடலாம். இதனால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற கோளாறுகள் நீங்கும்.
புகைப்பழக்கம்: அதேபோல, புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் இந்தப் பூக்களை சமைத்து சாப்பிட்டு வந்தால், அவர்களது உடம்பிலுள்ள விஷத்தன்மை கழிவுகளுடன் வெளியேறிவிடும்.. அத்துடன், புகைப்பிடிக்கும் ஆர்வத்தையும் இந்த பூக்கள் கட்டுப்படுத்திவிடும்..
வாழைப்பூவில் உள்ளது போலவே, இந்த அகத்திப்பூக்களிலும், நரம்பு போல நடுவில் இருக்கும். இதை நீக்கிவிட்டு, அதற்கு பிறகு பூக்களை பொடிப்பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்து கொண்டு, விருப்பமான சமையலை செய்து கொள்ளலாம். அகத்திப்பூக்களை சுத்தம் செய்து, பொடி பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் போன்றவற்றுடன் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இதயம், சிறுநீரகம், போன்ற தொந்தரவுகள் குறையும்..
பித்தம்: அகத்திப்பூக்களை வெயிலில் காயவைத்து, இடித்து பவுடராக்கி, சலித்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு, இரவு தூங்கும் முன்பு, அரை ஸ்பூன் எடுத்து பசும்பாலுடன் கலந்து குடித்து வந்தால் பித்தம் தணியும்.. மலச்சிக்கலும் நீங்கும். அதேபோல, இந்த பவுடரை பயன்படுத்தி சூப் போல தயாரித்தும் குடிக்கலாம். இதனால், வயிற்றிலுள்ள பூச்சிகளும் வெளியேறி, குடல் ஆரோக்கியம் மேம்படும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications