வெறும் இலை.. மார்பக வீக்கம் முதல் ஆஸ்துமா வரை.. இலை தரும் அற்புதம்.. ஒரு நோயும் கிட்ட வராது பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டைக்கோஸ் காயில் உள்ள மருத்துவ குணங்களை போலவே, முட்டைகோஸின் இலைகளிலும் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்துள்ளன.. கோஸ் இலைகளை எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

முட்டைகோஸை பொறுத்தவரை, வைட்டமின் B5, B6, B1 பி-5 போன்ற சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால்தான், தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருந்து வருகிறது. விதவித கலர்களில் முட்டைக்கோஸ் இருந்தாலும், அத்தனையிலுமே இதே சத்துக்கள்தான் உள்ளன.

Do you know the Excellent Health benefits of Cabbage Leaf and cabbage leaves is the Super food for all

சிறுநீரகம்: சிறுநீரகத்தை காக்கக்கூடிய காய்கறிகளில் தவிர்க்க முடியாதது முட்டைக்கோஸ்.. அதனால்தான், எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடிய இந்த காயை, நீரிழிவு நோயாளிகளை உணவில் தவிர்க்க வேண்டாம் என்பார்கள்..

கல்லீரலை காக்கக்கூடிய காய்கறிகளில் முக்கியமானது இந்த முட்டைகோஸ்.. அதிகமாக மதுஅருந்துபவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, நிறைய விஷத்தன்மைகள் கல்லீரலை சுற்றியுள்ள பகுதியில் படிந்திருக்கும். இந்த நச்சுத்தன்மையை போக்கும் சக்தி முட்டைக்கோசுக்கு உண்டு..

அல்சர் புண்கள்: குடலை காக்கக்கூடிய காய்கறிகளில் முதன்மையானது இந்த முட்டைகோஸ்.. குடல்புண்களை ஆற்றக்கூடியது.. அல்சர் இருப்பவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வந்தாலே அல்சர் தீரும்.. கண்களை பேணிகாக்கக்கூடியது இந்த காய்.. கண்புரையிலிருந்து நம்மை காக்கக்கூடியது.. கண் நரம்புகளை பலப்படுத்தக்கூடியது..

நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த முட்டைக்கோஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது.. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க தூண்டுகிறது.. அதிகமாக குழையவைத்துவிடாமல், ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் சாப்பிட்டாலே உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

எலும்புகள்: புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் இந்த கோஸ் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் செல்களும் அழிந்துவிடும். இதிலிருக்கும் வைட்டமின் K, எலும்புகளின் வளர்ச்சிக்கும், எலும்பு தேய்மான பிரச்சனையை தடுப்பதற்கும் உதவுகிறது. முட்டைகோஸில் உள்ள நன்மைகளை போலவே, முட்டைக்கோஸின் இலைகளிலும் நன்மைகள் பல உள்ளன.

வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் தன்மை இந்த முட்டைகோஸ் இலைகளுக்கு இருக்கிறதாம். இது குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமியின் "நியூ மதர்ஸ் பிரெஸ்ட் கைடு" என்ற புத்தகத்திலும் பதிவாகி உள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த இலைகளை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சில தாய்மார்களுக்கு பாலூட்டும்போது வலி ஏற்பட்டுவிட்டால், வலியை குறைக்க இந்த முட்டைகோஸ் இலைகளை ஒத்தடம் போல பயன்படுத்துவார்கள்.

தலைவலி : அதேபோல, தைராய்டு சுரப்பி, கை, கால் வீக்கம், தலைவலி இருந்தாலும், இந்த முட்டை கோஸ் இலைகள் தீர்வாகின்றன.. முட்டைகோஸ் இலைகளை தொண்டை பகுதியில், வெளிப்புறத்தில் வைத்து கட்டினால், தைராய்டு பிரச்சனை தாக்கம் குறையும் என்பார்கள். கை, கால்களில் வீக்கம் இருந்தாலும், இந்த முட்டைகோஸ் இலைகளை பயன்படுத்தலாம்.

அதாவது, கோஸ் இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து, வீக்கம் உள்ள இடங்களில் பேண்டேஜ் உதவியுடன் கட்டினால், வீக்கம் குறைய துவங்கும்.. எனவே, வலி உள்ள இடங்களில் இரவில் தூங்கும்போது இப்படி கட்டி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஆனால், சரும அலர்ஜி உள்ளவர்கள், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த கோஸ் இலைகளை பயன்படுத்துவது அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+