கண்ணாடி போடுறீங்களா.. பச்சை கீரையும், சிவப்பு காயும், மஞ்சள் பழமும் இருக்கே.. கண்களை காக்கும் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண் ஆரோக்கியத்துக்கும், நாம் உண்ணும் உணவுக்கும் நேரடி தொடர்பு உள்ளன.. இந்த உணவுப்பட்டியல் நீளம் என்றாலும், கண்களுக்கு நலன்தரும், சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

கண்களுக்கு தேவையான மிக முக்கிய சத்துக்கள் என்றால், வைட்டமின் E, A, C போன்றவையாகும். சூரியகாந்தி எண்ணெய், பாதாம், நல்லெண்ணெய், பப்பாளி போன்றவற்றில் இந்த வைட்டமின் E அதிகமாக உள்ளது.

Do you know the Excellent Health Benefits of Capsicum and 5 Supertips tips for Eye health

பப்பாளி: கண்புரையை வளரவிடாமல் தடுக்க உதவுவது இந்த வைட்டமின் E சத்துக்கள்தான். பாதாமில் வைட்டமின் E அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து, கண்புரை பிரச்சினையின் தீவிரத்தையும் குறைக்கிறது.

வைட்டமின் A சத்துக்கள் இருந்தால்தான், இரவு நேரத்திலும் பார்வை கூர்மையாக தெரியும்.. அந்தவகையில், கேரட், தக்காளி, தர்பூசணி, ஸ்வீட் உருளைக்கிழங்கு, கீரைகள், ப்ரோக்கோலி போன்றவற்றில் வைட்டமின் A நிறைந்துள்ளன. அதிலும் புராக்கோலியை அரை கப் சாப்பிட்டாலே, உடலுக்கு சுமார் 60 மைக்ரோகிராம் வைட்டமின் A கிடைக்கிறதாம்.

பச்சை கேரட்: கேரட்டில் வைட்டமின் A அதிகமாகவே உள்ளது.. இந்த கேரட்டில் பீட்டா கரோட்டினும், லூடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டும் நிறைந்துள்ளதால், விழித்திரை உள்ளிட்ட கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கேரட் தருகிறது.. அத்துடன், மாகுலர் சிதைவுக்கான ஆபத்தையும் குறைக்கிறது. கண்ணில் இருக்கும் கார்னியாவுக்கு, மிக முக்கிய தேவையே இந்த வைட்டமின் A சத்துக்கள்தான். அரை கப் கேரட்டை, பச்சையாக சாப்பிட்டாலே, 459 மைக்ரோகிராம் வைட்டமின் A கிடைக்கும்.

கோழிமுட்டையிலும் வைட்டமின் A உள்ளது.. அதிலும், முட்டையின் வெள்ளை கருவில் உள்ள புரோட்டீனும், மஞ்சள் கருவில் உள்ள கொலாஜன், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்களை தடுக்க பேருதவி புரிகிறது.

ரத்த ஓட்டம்: ஆரஞ்சு, எலுமிச்சம் பழங்களில் இந்த சத்துக்கள் அதிகமாகவும், பப்பாளி, கொய்யா, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி போன்றவைகளிலும் இந்த வைட்டமின் C சத்துக்கள் நிறைந்துள்ளன. கண்களின் ரத்த நாளங்களுக்குள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவுவது இந்த வைட்டமின் C உணவுகள்தான்.

கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதில் மீன்களுக்கு பெரும்பங்கு உண்டு. காரணம், மீன்களிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கண்களி்ல் ஏற்படும் மாஸ்குலர் சிதைவை தடுக்க உதவுகிறது. எனவே, ஒமேகா 3 அதிகமுள்ள சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி போன்ற மீன்களை வாரம் 2 முறையாவது சாப்பிட வேண்டும்.

குடைமிளகாய்: கோழிக்கறி, பால், ராஜ்மா, வேர்க்கடலை, பீன்ஸ், சியா விதைகள், ஆளி விதைகள் பச்சை இலைக்காய்கறிகள், சர்க்கரை, பட்டாணி, குடைமிளகாய், வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய் போன்றவைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால், விழித்திரை பிரச்சனை முதல் செல்கள் சேதம் அடையாமல் தடுத்து நிறுத்த உதவுகின்றன.

இதில், சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் A அதிகமாகவே உள்ளது. ஒரே ஒரு முழு சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால், உடலுக்கு 1403 மைக்ரோகிராம் வைட்டமின் A கிடைக்கிறதாம்.

மஞ்சள் நிற காய்கள்: அதேபோல B கரோட்டின் சத்துக்களையும் அதிகம் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை தரும்.. மஞ்சள், ஆரஞ்சு நிற உணவு பொருட்களில், இந்த சத்துக்கள் அதிகமாக இருக்கும்.. குறிப்பாக, கேரட், பப்பாளி, கேப்ஸிகம், சிவப்பு நிற காய்கறி, மஞ்சள் நிற காய்கறி, மஞ்சள் நிற பழங்கள் இப்படி நிறைந்திருக்கும். அந்தவகையில், மாம்பழம், அவகேடோவையும் தவறவிடக்கூடாது.

உணவுமுறையில் இப்படி மாற்றம் கொண்டுவந்தாலே, கண் நலன் பாதுகாக்கப்பட்டுவிடும்.. அத்துடன், வீட்டில் மேலும் சில எளிய முறைகளை பயன்படுத்தி கண்ணின் நலன் காக்கலாம்.

தேங்காய்பால்: வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு இப்படி ஏதாவது ஒரு காய்கறியை வெட்டி துண்டுகளாக்கி, கண்ணின் மீது வைக்கலாம்.. அல்லது தேங்காய் பால் சிறிது எடுத்து கண்ணின் மேற்புறம் தேய்க்கலாம்.. வெளிப்புறமாக இவ்வாறான முயற்கிகளை எடுத்தாலும், ஆரோக்கியமான உணவும், முறையான தூக்கமும், நிறைய தண்ணீர் குடிப்பதும்தான், கண்களை காக்கும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+