பூனை மீசை.. சிறுநீரக கோளாறை அடியோடு விரட்டும் "பூனைமீசை செடி".. சர்க்கரை நோயாளிகளே.. நோட் பண்ணுங்க
சென்னை: நம்முடைய வீடுகளில் சில குறிப்பிட்ட மூலிகைகளை கட்டாயம் வளர்க்க வேண்டும் என்கிறார்கள்.. அதில் ஒன்றுதான் பூனைமீசை மூலிகை.
பாரம்பரிய மருத்துவத்தில் பூனை மீசை மூலிகைக்கென்றே பிரத்யேகமான இடம் உள்ளது.. சிறுநீரகத்தின் தோழன் என்றே இந்த மூலிகையை சொல்லலாம்..
கல்லீரலை நோய்கள் வராமல் எப்படி கீழாநெல்லி மூலிகை பாதுகாக்கிறதோ, அதுபோலவே, சிறுநீரக கோளாறுகளை நீக்குவதில், இந்த பூனை மீசை மூலிகைக்கு பெரும்பங்கு உள்ளது. அதாவது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்கும் சக்தியை கொண்டது இந்த பூனை மீசை.

பூனை மீசை: இந்த செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசை போலவே இருக்கும் என்பதால், இந்த பெயரிலேயே அழைக்கிறார்கள்.. சில சமயம், துளசி இலை போலவும் இருக்கும். அதனால், சீரக துளசி, ஜாவா தேயிலை என்றும் சொல்கிறார்கள்.
இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு தினமும் 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு உட்பட சிறுநீரக கோளாறுகள் அத்தனையும் நீங்கிவிடுமாம். சிறுநீரக பாதிப்பு என்றாலே நீரிழிவு நோயையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டால், அதை கட்டுக்குள் கொண்டுவர இந்த மூலிகை உதவுகிறது..
மூலப்பொருட்கள்: சிறுநீரக உபாதைகளை தவிர, ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனைக்கும், இந்த மூலிகை உபயோகமாகிறது. அதனால்தான், சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
உடலில் தேவையில்லாத உப்புக்கள், மற்றும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது இந்த பூனை மீசை. அதாவது, ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் குறைகிறது.. அத்துடன், சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகையே அவைகளை கரைத்து வெளியேற்றிவிடும்.
மாதவிடாய் கோளாறுகள் இருந்தாலும், பித்தப்பை கற்கள் இருந்தாலும், கல்லீரலில் அலர்ஜி ஏற்பட்டாலும், கடும் காய்ச்சல் என்றாலும், இந்த பூனை மீசை மூலிகையே போதும். அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
பாரம்பரிய மூலிகை: இந்த மூலிகை சாறு, தினமும் 2 வேளை குடித்து வந்தாலே, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பிரச்சனைகள் தீருமாம். அல்லது ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் கொதிக்க வைத்து, கஷாயம் போலவும் குடிக்கலாம்.. ஜப்பான், மலேசியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், இந்த மூலிகையில் டீ தயாரித்து குடிப்பார்களாம்.
அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, இந்த பூனை மீசை மூலிகையையும் கொட்டி, அடுப்பை அணைத்துவிட்டு, மூடிவைத்துவிட வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து, வடிகட்டி குடித்தாலே போதும். தேவைப்பட்டால், தேன், பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம். ஆனால், வழக்கமாக டீ போடுவதுபோல, இந்த மூலிகையை சேர்த்து கொதிக்க வைக்க கூடாதாம்.
நீரிழிவு நோயாளிகள்: எனவே, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு நோயாளிகள், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இவைகளை மருந்தாக அல்லது தேநீராக எடுத்து கொண்டால் பெரும்பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications