Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலந்தை இலை.. இலந்தைப்பழத்தில் இவ்வளவு நல்லதா? "அந்த" பிரச்சனையை அசால்ட்டா தீர்க்கும் இலந்தைப்பழங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தூனூண்டு இலந்தை பழத்துக்குள்ளே இவ்ளோ சத்துக்கள் உள்ளனவா? என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.. உடலுறுப்புகளை பலப்படுத்தக்கூடிய இந்த இலந்தைப்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஜூஜூபி பழம் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடியது இந்த இலந்தை பழங்களைதான்.. ஏகப்பட்ட புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் C, D, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது இந்த இலந்தை.

Do you know the Excellent Health Benefits of Elanthai Pazham and Jujube Fruit alice elanthai Palam is Best for Women

இலந்தை பழம்: 100 கிராம் இலந்தை பழத்தில், 74 சதவிகிதம் கலோரி, 17 சதவிகிதம் மாவுப்பொருள், 0.8 சதவிகிதம் புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துக்கள் அதிகம் நிறைந்து உள்ளது. நீர்ச்சத்துக்கள் நிறைந்து, கலோரிகள் குறைந்த பழம் என்பதால், அனைவருமே இதனை தாராளமாக சாப்பிடலாம்.

நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி எண்ணிக்கை காரணமாக, மிகவும் ஆரோக்கியமான பழம் என்று அறியப்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு அருமையான ஆனால், விலை குறைந்த ஊட்டச்சத்து பொக்கிஷம் இலந்தைப்பழம்.

பொட்டாசியம்: இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதே இதன் பிளஸ் பாயிண்ட்டாகும்.. உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய இந்த இலந்தைப்பழம், உடலிலுள்ள பித்தத்தை நீக்கக்கூடியது.. அதனால்தான், மதியம் சாப்பாட்டுக்கு பிறகு, இந்த பழத்தை சாப்பிட சொல்வார்கள். இதனால், செரிமானம் எளிதாவதுடன், பித்தமும் நீங்கிவிடும்..

அல்லது தினமும் காலையில் உணவு சாப்பிட்டு முடித்ததுமே 5 முதல் 10 இலந்தைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, குமட்டல் நீங்கிவிடும். சரியாக தூக்கம் வராதவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் வரும்..

ரத்த அழுத்தம்: சுண்ணாம்புச்சத்து, கால்சியம் சத்து அதிகம் கொண்ட இலந்தைப்பழம், உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்வது.. ரத்த உற்பத்தியை அதிகம் தரக்கூடியது இந்த பழம். பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தால், அதனை தடுக்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது... இளநரையை போக்கக்கூடியது..

என்புமெலிவு நோய் (Rickets) அதாவது எலும்புருக்கி நோய் என்பார்கள்... எலும்பு மெலிந்துபோவதாலால் ஏற்படும் நோய் இதுவாகும்.. இந்த நோய்க்கு, இலந்தை பழம், இயற்கையான மருந்தாக அமைந்துள்ளது.. உணவு குறைபாடுகள் அல்லது மரபியற் சிக்கல்கள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய நோய் இதுவாகும்.. ஆண்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ள இந்த பழம் எலும்புகளை உறுதியாக்குகிறது. எலும்புகள் மட்டுமல்லாமல் பற்களையும் வலுவடைய செய்கிறது.

இலந்தை இலை: இலந்தைப்பழம் மட்டுமல்ல, இலந்தையின் இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தது. குளிர்ச்சியை தரக்கூடிய இந்த இலையை, விழுதாக அரைத்து, காயங்கள், புண்கள் மீது கட்டினால், விரைவில் ஆறிவிடும். கட்டிகள் மீது கட்டினாலும், சீக்கிரமாகவே அவை பழுத்து உடைந்துவிடும்.

இலந்தை மரத்தின் பட்டைகளும் மருத்துவ குணம் வாய்ந்தது.. பட்டைகளை காயவைத்து தூள் செய்து பத்திரப்படுத்தி வைக்கலாம். உடலில் புண்கள், காயங்கள் இருந்தால், தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து குழைத்து பூசினால், ஆறிவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+