கொத்து கொத்தா முடி கொட்டுதா? வெறும் பூக்கள் போதும்.. யோசிக்க முடியாத பலன்.. இந்த ஆயில் ட்ரை பண்ணுங்க
சென்னை: உடலிலுள்ள உஷ்ணத்தை தணிக்க தாமரை பூக்கள் ஒன்றே போதும். இதை வைத்தே பல்வேறு நலன்களை நாம் பெற்றுவிடலாம்.
தாமரையின் இலை, தண்டு, பூ என அனைத்மே மருத்துவ குணம் கொண்டாலும், ஆயுர்வேத மருந்துகளில் தாமரை பூக்களுக்கான முக்கியத்துவம் அதிகம்..

வெண்தாமரை, செந்தாமரை இரண்டிற்கும் ஒரே மருத்துவ தன்மை கொண்டுள்ளது... இதிலுள்ள தாமிரச்சத்துக்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்குக்கும் பெரிதும் உதவுகிறது.
மருந்துகள்: வெண்தாமரைகள் இதய மற்றும் மூளை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறதென்றால், செந்தாமரையோ, மூல உஷ்ணத்திற்கு கைகொடுக்கிறது.. இந்த பூக்களை போலவே, இதன் கிழங்கு, கொட்டை, தண்டு, இலை போன்றவைகளும் மருத்துவ பலனை தருகின்றன.
தாமரை பூக்களில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்பும், அழற்சி எதிர்ப்பும், எண்ணற்ற நோய்களை தீர்க்க காரணமாகின்றன.. இதிலிருக்கும், வைட்டமின் C, B, நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், குளோரின் என பல்வேறு தாதுக்கள் நிறைந்த அற்புதம்தான் இந்த தாமரை பூக்கள்..
கண் பார்வை: பெரும்பாலும் கண் நோய்களை தீர்க்கவே இந்த குளிர்ச்சி பூக்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.. 100 மில்லி சுத்தமான நீரில், பசும்பால் 100 மில்லியை சேர்த்து, அதில் தாமரை பூக்களின் இதழ்களையும் போட்டு காய்ச்சி இறக்கிவிட வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கியதுமே வெளிவரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில்படும்படி காலை, மாலை, 2 வேளை செய்துவந்தாலே, கண் குறைபாடுகள் உடனே நீங்கும்.
இந்த பூக்களை வெறும் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் கொதிக்கவைத்து காய்ச்சி வடிகட்டி, பனை வெல்லம் கலந்து குடித்து வந்தால், கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கோளாறுகள்: இந்த தண்ணீர் காய்ச்சலை கட்டுப்படுத்திவிடும்.. உடம்பில் உள்ள அத்தனை உஷ்ண கோளாறுகளையும் தணிக்கக்கூடும்.. உடல் சூடு தணியும்.. காய்ச்சல் குறைய துவங்கும்.. பித்தமும் குறையும்.. இதனால், வயிறு மற்றும் வாய்ப்புண்கள் ஆறும்..
சரும எரிச்சல், கண் எரிச்சல் நீங்கும்.. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. ரத்த அழுத்தத்தை குறைக்கும்.. ரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறும்.. ரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களை தவிர்த்து மற்றவர்கள் இந்த தண்ணீரை குடிக்கலாம்.
எண்ணெய்: இந்த பூக்களில் எண்ணெய் காய்ச்சுவார்கள்.. அதாவது, தாமரையின் இலை, பூவின் சாறு, கிழங்கின் சாறு, இந்த மூன்றையும் சமமாக எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, ஆறவைத்து, ஒரு பாட்டில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதை வாரம் 2 முறையாவது தலைக்கு மசாஜ் போல தேய்த்து குளித்து வந்தால், தலை முடி உதிர்வு கட்டுக்குள் வரும். கண் கோளாறுகள் சீராகும்.. உடல் உஷ்ணம் தணியும்.. இந்த எண்ணெயை ரணங்களில் தடவினால், விரைவில் ஆறிவிடும்.












Click it and Unblock the Notifications