மாசி கருவாடு.. "அந்த" குறையை தீர்க்கும் மாசியின் மகத்துவம்.. அடடே, இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே
சென்னை: கருவாட்டில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? அதிலும் பெண்களுக்கு உதவக்கூடிய கருவாடு எது தெரியுமா-
கருவாட்டில் நிறைய நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன.. இரும்புச்சத்துக்கள் உள்ளன.. கருவாடுகளை சமைத்து சாப்பிடும்போது, வயிற்றிலுள்ள நச்சுக்கள், பூச்சிகள் நீங்கிவிடும். இதனால், குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

கருவாடுகள்: கருவாடுகளில் எப்போதுமே கால்சிய சத்துக்கள் அதிகமாக இருக்கும்.. எனவே, எலும்புகள், பற்களின் உறுதிக்கு உறுதுணையாகின்றன இந்த கருவாடுகள்.. பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்யவும், இந்த கருவாடுகள் உதவுகின்றன.. வாத, பித்தத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டுவரக்கூடியது அனைத்து தன்மையும் கருவாடுகளுக்கு உண்டு.
அதனால்தான், மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, போன்ற உள்ளுறுப்புகளை பலப்படுத்தக்கூடிய உணவுவகைகளில் பிரதான இடத்தை கருவாடுகள் வகிக்கின்றன.
இருமல், சளி: கிராமப்புறங்களில் இன்றுவரை, இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாக உள்ளது.. கருவாட்டு சாறு வைத்து குடித்தால், தலையில் உள்ள நீர் முதல் சுவாசக்கோளாறு வரை நீங்கிவிடும்.. உடல் நலம் குன்றியவர்கள், பலநாள் படுக்கையில் கிடந்தவர்களுக்கு, கருவாட்டு குழம்பு சாப்பிட தரும்போது, விரைந்து உடல் நலம் தேறுவார்கள்.
ருசியான கருவாடு என்றால், நெய்மீன் என்று சொல்லப்படும் சீலா மீன் கருவாடுதான் என்றாலும், அதிக சத்து நிறைந்த மீன் என்றால் அது மாசி கருவாடுதான். சூரை மீனை கருவாடாக்கினால், அதுதான் மாசி கருவாடு
மாசி கருவாடு: இந்த மீனை சுத்தம் செய்து, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, நன்றாக அவித்து வெள்ளைத்துணியில் முறுக்கி நிழலில் காய வைப்பார்கள்.. 10 நாட்களுக்கு மேல் காயவைத்தால், புளியங்கொட்டை போல இறுக்கமாகிவிடும். 2 வருடமானாலும் கெட்டுப்போகாமல், அதே வாசத்துடன் இருக்கும்.
உப்பு சேர்க்காமல் காயவைக்கப்படும் இந்த கருவாட்டில் முட்கள் இருக்காது. இந்த மாசிக்கருவாட்டை மொத்தமாக வாங்கி சுத்தம்செய்து, இடித்து உலர்த்தி, அதில் லேசாக எண்ணை அல்லது நெய் சேர்த்து வறுத்து எடுத்து வைத்து கொள்வார்கள்... பிறகு, சட்னி, சாம்பார், வறுவல், பொறியல், கூட்டு செய்தால், அதில் இந்த கருவாட்டினை சேர்த்து விடுவார்கள்..
தம்பதிகள்: ஆண் - பெண்களுக்கான அருமருந்தாக திகழ்வது மாசிக்கருவாடுதான்.. காரணம், ஆண்குறி, விதைப்பை, விந்துப்பை, நீர்ப்பை, இவைகளை சரி செய்து உணர்ச்சி பெருக்கத்தை உண்டாக்கி, விந்து திரவத்தை உண்டாக்கி, கரு முழு ஆரோக்கியத்தோடும், முழுஆயுளோடும் இருப்பதற்கு காரணமான வாதம் பித்தம், ரத்த ஓட்டம் போன்றவகைளை சீர் செய்கிறது இந்த மாசிக்கருவாடுகள். அதனால்தான், திருமணமான தம்பதிகளுக்கு இந்த கருவாடை தினமும் சமைத்து கொடுப்பார்கள்.
ஆணுக்கு ஆண் விந்து, அதிகரிக்க செய்வதோடு, குறைந்து இருந்தால் அதை ஈடுகட்டும் மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது. வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் போன்றவற்றை சீராக்குகிறது..
கருவாடு: இந்த கருவாட்டினை பெண்கள் சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை வலுவாகும்.. கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் ஏற்படும்.. குழந்தை பிறக்கும்போதே ஆரோக்கியமாக பிறக்கும். மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு போன்றவற்றை பலப்படுத்தக்கூடியது இந்த மாசி கருவாடு.
ஆண், பெண் 2 பேருக்குமே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் உடல் உறுதியையும் ஏற்படுத்தும், இந்த கருவாட்டினை நிறைய பேர் சாப்பிடாமலேயே தவிர்த்துவிடுவதால்தான், பல உடல்நல கோளாறு சமீபகாலமாக ஏற்படுவதாக சொல்கிறார்கள். எனவே, உணவு நிபுணர்களின் ஆலோசனை பெற்று மாசி கருவாட்டினை உணவில் சேர்த்து வந்தாலே, பிரதான நோய்கள் நம்மை அண்டாது.












Click it and Unblock the Notifications