சர்னு சுகர் குறையணுமா.. அப்ப இந்த இலை போதுமே.. வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க.. இலைகளின் ஆச்சரியம்
சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவர, பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், விதைகள், பருப்புகள் எத்தனையோ இருக்கின்றன.. இவைகளில் இலைகளின் முக்கியத்துவத்தையும் மறுத்துவிட முடியாது. அந்தவகையில், 2 இலைகளை பற்றி பார்ப்போம்.
இயற்கையாகவே சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த தன்மை கசப்பு நிறைந்த இலைகளுக்கு உள்ளது.. ரத்தத்தில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதில் தவிர்க்கவே முடியாதது, முருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையாகும்.
காலையில் வெறும் வயிற்றில் நான்கைந்து கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டாலே, உணவில் இருந்து சர்க்கரை உற்பத்தி ஆகும் அளவை குறைக்க உதவுமாம்.. இயற்கையாகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க இந்த கறிவேப்பிலை உள்ளது. அத்துடன், இதிலுள்ள நார்ச்சத்து நீண்ட காலத்திற்கு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

வேப்பிலை: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வேப்பிலைக்கு உள்ளது.. ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலையை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைத்து, இலைகளை வடிகட்டி, சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்குமாம்..
நீரிழிவு நோய்க்கு மா இலைகளைப் பயன்படுத்த எளிதான வழிகள் : 10-15 மா இலைகளை மென்மையாகும் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இலைகள் முழுவதுமாக கொதித்த பிறகு அதனை இரவு முழுவதும் குளிர்விக்கவும்.
ரத்த சர்க்கரை: அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த கலவையை சில மாதங்களுக்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மேலும் காலையில் வெறும் வயிற்றில் மா இலைகளை மென்று சாப்பிடுவதும் நல்லது. இருப்பினும், காய்ச்சி வடிகட்டிய நீர் நல்ல பலன்களை கொடுக்க கூடும்.
இதில், மாவிலைகளின் பங்கு அபாரமானது.. மா இலைகளில் பெக்டின், வைட்டமின் C, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது பேருதவி புரிகிறது. இன்சுலின் தொகுப்பு மற்றும் குளுக்கோஸ் விநியோகத்தை அதிகரிக்கும் திறன் இந்த இலைகளில் உள்ளது.. அதனால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது..
15 மாவிலைகளை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இரவு முழுவதும் அந்த நீரை குளிர்விக்கவும்.. மறுநாள் காலையில் வடிகட்டி, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் தெரியும்..
மாவிலைகள்: அந்தவகையில், மற்றொரு முக்கியமான இலைகள் அமிர்தவல்லி எனப்படும் ஆச்சரிய இலைகள்.. கிலோய், குடுச்சி, சீந்தில் கொடி என பலவகையான பெயர்களில் இந்த இலைகளை அழைப்பார்கள்..
இந்த இலையில் டீ போட்டு வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.. அல்லது கறிவேப்பிலை போல, இலைகளை பறித்து கழுவி, மென்று சாப்பிடலாம். இதனால், ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்..
அமிர்தவல்லி: இந்த அமிர்தவல்லி இலையை தூள் செய்து, ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்பளர் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன்பு ஊறவைத்து விடவேண்டும். மறுநாள் காலை எழுந்ததுமே குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.அமிர்தவல்லி இலைகளாக கிடைப்பது அரிது என்றாலும், கேப்சூல்களாக கிடைக்கின்றன. ஆனால், டாக்டர்களின் ஆலோசனைகளை பெற்றே, இதுபோன்ற மூலிகைகளை சாப்பிட வேண்டும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications