மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?
மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்.. சிறுநீரகத்தின் பாதுகாவலன் என்று சொல்லலாம். இந்த செடிகளின் வேர்கள்கூட மருந்தாக சிகிச்சைகளில் பயன்படுகிறது.. வேர்களை காயவைத்து, பொடிசெய்து, சுடுநீரில் குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.

சிறுநீரகம்: சிறுநீரகத்துக்கு பேருதவி செய்யக்கூடிய இந்த கீரைகள், ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது.. ரத்த விருத்தி அடைய வேண்டுமானால், இந்த மூக்கிரட்டை கீரையை கூட்டு போல செய்து சாப்பிடுவார்கள்.. எப்போதுமே மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துகொள்ளும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது என்பார்கள்.. குளிர்ச்சித்தரும் உணவுகளைதான் எடுக்க வேண்டுமாம்.
சிறுநீரகம்: வழக்கமாக, சிறுநீரகத்தில் தொந்தரவு என்றால், இந்த கீரைகளை சுத்தம் செய்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அது பாதியாக வரும்வரை சுண்ட காய்ச்சி குடிக்க தருவார்கள். இதனால் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அது உடைந்து கரைந்துவிடும்.. சிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும்.. மஞ்சள் காமாலை என்றால், கீழாநெல்லியுடன் இந்த மூக்கிரட்டையை சேர்த்து மருந்தாக தருவார்கள்.
அதேபோல, மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மூலநோய்களும் நீங்கும்.
உடல் எடை: உடல்எடை குறைபவர்களுக்கு பெஸ்ட் சாய்ந்த இந்த மூக்கிரட்டை கீரைகள்.. மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள்.. இந்த பொடியையும் உடல் பருமனை குறைக்க பயன்படுத்தலம்.. புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த இலைகள்.. ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மையையும் குணப்படுத்தும்.
மூக்கிரட்டை கீரையில் எப்படி ரசம் வைப்பது தெரியுமா? இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
மூக்கிரட்டை ரசம்: அதில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் கீரையை போட்டு கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும், தட்டிய பூண்டு பற்கள், சீரக தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் வடிகட்டி குடித்தாலே, சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும். மிகுந்த மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது பாதுகாப்பானது..!!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications