செவ்வாழை.. தினம் ஒரு செவ்வாழை.. ஜஸ்ட் ஒரு வாரத்தில் ஆச்சரிய மாற்றங்கள்.. வசமாக்கும் செவ்வாழைப்பழம்
சென்னை: குழந்தை பேறு தரக்கூடியது செவ்வாழை, இளமையை தக்க வைக்கும் தன்மை கொண்டது.. இந்த பழத்தை சாப்பிடுவதற்கென்றே ஒரு நேரம் இருக்கிறதாம்.. என்ன தெரியுமா?
வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அடங்கியது செவ்வாழை.. பொட்டாசியம் அதிகம் உள்ள பழம் என்பதால், சிறுநீரகங்களில் கற்கள் சேருவதில்லை..

ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது என்பதால், இதய நோய்களை நெருங்கவிடாமல் செய்கிறது. இதனால், பக்கவாதம் வராமலம் தடுக்கப்படுகிறது.. அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் செவ்வாழையை சாப்பிடலாம்.
எப்பேர்ப்பட்ட தோல் பிரச்சனை இருந்தாலும், செவ்வாழை பழத்தை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே நிவாரணம் கிடைத்துவிடும். அதிலும், நகத்தில் ஏற்படும் புள்ளி போன்ற கோளாறுகளை நீக்க, இந்த பழங்கள் துணைபுரிகின்றன.
நுரையீரல், கல்லீரல், இதயம், குடல், என முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்துக்கு தூண்டுகோலாகிறது.. செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு மாலை கண் நோய் ஏற்படுவதில்லை.. மாலைக்கண் பாதிப்பு இருப்பவர்களும், இந்த பழத்தை சாப்பிட்டால் கண்பார்வை கூர்மைபெறும்.
கண் பாதிப்புகள்: கண்ணில் நீர்வழிதல், கண்ணில் எரிச்சல், கண்களுக்கு அதிக வேலை தருவது, என எந்த கண்பாதிப்பு இருந்தாலும், செவ்வாழை சாப்பிட்டு வந்தாலே போதும்.. அல்லது இந்த பழத்தை துண்டு செய்து, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதல் உடனே நின்றுவிடும். தினமும் 100 கிராம் அளவுக்கு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு, வயதான காலத்திலும் கண் பிரச்சனை ஏற்படாது என்கிறார்கள்.
பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தும் தன்மை இந்த செவ்வாழைக்கு உண்டு, இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்கிறது.. முக்கியமாக மிக முக்கியமாக கருமுட்டைகள் சிதையாமல் பாதுகாக்கிறது. குழந்தைபேறு இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், 40 நாட்களுக்குள் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.
செவ்வாழை: ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும். எனவேதான், அதனால்தான், இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்பார்கள்.
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. ஒருவேளை இந்த நேரத்தில் முடியாவிட்டால் பகல் 11 மணிக்கு சாப்பிடலாம் அல்லது மாலை 4 மணி சாப்பிடலாம்... காரணம், சாப்பிட்டதுமே செவ்வாழையை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.. இது செவ்வாழைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா பழங்களுக்கும் பொருந்தும் உண்மை.
-
30ஐ தொட்டதும் சட்டென உடல் எடை ஏறுதா? காரணம் இதுதான்! பலருக்கும் தெரியாத உண்மை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications