அன்னாசி பூ.. அவ்வளவும் மருத்துவம்.. இது வெறும் மசாலா கிடையாது.. பன்றி காய்ச்சலையே விரட்டும் ஸ்டார்பூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெறும் பிரியாணியில் மசாலா பொருளாகவே சேர்க்கப்படும் அன்னாசிப்பூவின் அருமை சிலருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.. அன்னாசிப்பூக்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஸ்டார் வடிவ வாசனை பொருளான, ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த இந்த அன்னாசி பூவில், வைட்டமின் A, C உட்பட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன..

Do you know the Excellent Health Benefits of Star Anise and Annasi Poo is the Best Medicinal Herb for all

ஜீரண சக்தி: ஸ்டார் பூ என்றாலே அஜீரணத்தை போக்கக்கூடிய அற்புதமான மூலிகை. நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை கிட்டத்தட்ட 23 சதவீத மக்கள் வாயு மற்றும் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்களாம். வெறுமனே, இந்த அன்னாசிப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வயது முதியவர்கள் குடித்து வரலாம்.. இதனால் வாயு தொந்தரவு இருக்காது.. செரிமானம் எளிதாகும்.. வயிறு உப்புசம் போன்ற அஜீரணத்தை நீக்கக்கூடியது..

குழந்தைகளுக்கும் வாந்தி உள்ளிட்ட பிரச்சனை இருந்தால், இந்த தண்ணீரை தருவார்கள். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருந்தால், அவைகளையும் அழித்து வெளியேற்றும் தன்மை இந்த அன்னாசி பூக்களுக்குஉண்டு.

பன்றிக்காய்ச்சல்: நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க செய்யும் தன்மை இந்த அன்னாசி பூவுக்கு உண்டு.. பன்றிக் காய்ச்சலுக்கு தரப்படும் மருந்துகள் இந்த அன்னாசிப்பூக்களையும் மூலப்பொருட்களாக சேர்க்கிறார்களாம்.

இந்த அன்னாசி பூவை வறுத்து, பவுடர் போல வைத்து கொண்டால், சில உடல்நல கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.. முக்கியமாக, செரிமான பிரச்சனை இருப்பவர்கள், இந்த அன்னாசி பூவை பவுடராக அரைத்து வைத்துக் கொண்டு, அதிலிருந்து தினமும், அரை கிராம் வீதம் 3 வேளையும், சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலே போதும்.. ஜீரணம் எளிதாவதுடன், புளித்த ஏப்பமும் நீங்கும்..

கஷாயம்: அதேபோல, சளி, இருமல் தொந்தரவு இருந்தாலும், கஷாயம் போட இந்த பவுடரை பயன்படுத்தலாம். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில், மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்து வந்ததும், அதனுடன், இந்த அன்னாசி பவுடரை அரை ஸ்பூன் கலந்து, வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் கட்டுப்படும்.. சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இந்த அன்னாசி பூக்களுக்கு உண்டு.. முறையற்ற மாதவிலக்கை சரிசெய்து, மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்தக்கூடியது.. இதற்கான மருந்தை வீட்டிலேயே தயாரிப்பார்கள்..

பனைவெல்லம்: அன்னாசி பூக்களை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் பனை வெல்லம் அரை ஸ்பூன் அன்னாசி பொடி, கால் ஸ்பூன் பெருங்காயம் கொதிக்க வைத்து வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வந்தாலே போதும்.. சீரான மாதவிடாய் ஏற்படும்..

உயர் ரத்தம் அழுத்த பிரச்சனைகளையும், இதய பாதிப்பையும் சரி செய்யும் திறன் கொண்டது இந்த பூக்கள். அதேபோல, தாய்ப்பாலை பெருக்கக்கூடியது இந்த பூக்கள்.. புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளையும் வெளியேற்றும். இந்த பூவில் கலோரிகள் மிகவும் என்பதால், உடல் எடை குறைப்பவர்களும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது..

எண்ணெய்: இந்த அன்னாசி பூவில் எண்ணெய் தயாரிப்பார்கள்.. இந்த எண்ணெய்யை சரும அலர்ஜிக்கு பயன்படுத்துவார்கள்.. அதேபோல, இந்த எண்ணெய்யை உடம்பெல்லாம் தேய்த்து, மசாஜ் போல செய்துவிட்டால், ரத்த ஓட்டம் சீராகும்.. நரம்புகள் பலப்படும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+