தூதுவளை தூள்.. தூதுவளையின் நாலஞ்சு இலை போதும்.. நோயை விரட்டும் தூதுவன்.. தூது போகும் தூதுவளை பவுடர்
சென்னை: தூதுவளை இலைகளின் பயன்கள் அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், தூதுவளை இலை பொடியின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தூதுவளை என்ற செடியின் இலை, பூ, காய், வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.. சுவாச கோளாறுகளை பெருவாரியாக தீர்க்கக்கூடிய தன்மை இந்த தூதுவளைக்கு உண்டு.

நச்சுக்கள்: சளி, இருமல், தலைபாரம், நீர்க்கோர்வை, போன்ற தொந்தரவுகளுக்கு மருந்தாகிறது இந்த தூதுவளை.. பசி உணர்வை தூண்டக்கூடியது.. உடலிலுள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியே தள்ளக்கூடியது.. ஆண்மை குறைபாடுகளை நீக்கி நரம்பு சம்பந்த பிரச்சனைகளையும் தீர்க்க தூதுவளை உதவுகிறது.. கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் தூதுவளை தீர்க்கிறது.
இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக தூதுவளை உதவுகிறது. தூதுவளையை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.. சில தூதுவளை இலையை தினமும் மென்று தின்றாலே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் அனுமதியுடன் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
புற்றுநோய்: தொண்டைப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் போன்ற புற்று அபாயத்தை தடுக்கும் சக்தி தூதுவளைக்கு உண்டு.. இதில், தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு சிறந்தாக மருந்தாக ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், சளி, காய்ச்சல் நம்மை நெருங்காது. இந்த இலையை கஷாயம் போல வைத்து, 1 கிராம் திப்பிலி பொடி சேர்த்து சாப்பிட்டால், சளி, காய்ச்சல், கோழை, இருமல் பிரச்சனைகள் தீரும்.. ஆனால், தூதுவளையால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், நெய் அல்லது பால் சேர்த்து கொள்ளலாம்.
தூதுவளை கீரை: தூதுவளை கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துகொண்டால், தினமும் 2 முறை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.. இதனால், இருமல், இளைப்பு பிரச்சனைகள் தீரும்.. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உடலில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் தினமும் இந்த பொடியை, 48 நாட்கள் ஒரு மண்டலம் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சித்த மருத்துவத்தில் இந்த சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளை மிகமுக்கியமான ஒன்று.. தூதுவளை பவுடர் என்றே நாட்டு மருந்து கிடைகளில் கிடைக்கிறது.. இந்த பவுடரின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இருமல் பிரச்சனை: இந்த பொடியுடன் திப்பிலி பொடியையும் சமமாக சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால், இருமல் நின்றுவிடும்... பசும்பாலில் இந்த பொடியை கலந்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் நீங்கும்..
இதே பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் அனீமியா பிரச்சனை விலகி, ரத்த விருத்தி உண்டாகும். அல்லது தூதுவளை இலைகளை பறித்து, சுத்தம் செய்து அதை காயவைத்து, தூள் செய்து வைத்து கொண்டும் பயன்படுத்தலாம்.. இதை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தாலே, ரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, ரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications