கொழு கொழு உடம்பா? உடனே வெயிட் லாஸ் பண்ணணுமா? இந்த சூப்பர் ஜூஸ் ட்ரை பண்ணுங்க.. அருமையான செலரி சாறு
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும், அவைகளுக்கு தூண்டுகோலாக உதவக்கூடியது சத்தான பானங்கள்தான். அந்தவகையில் சோம்பு நீர் தவிர்க்க முடியாதது.
உடலில் உள்ள செரிமான அமைப்பை சிக்கலில்லாமல் வைத்திருந்தாலே, உடல் எடை அசால்ட்டாக குறையும்.. நச்சுகளையும், கழிவுகளையும் வெளியேற்றிவிட்டாலே, சரியான உடல் எடையை பராமரிக்க முடியும்.. , தேவையற்ற கொழுப்புகளையும் நீக்க முடியும். இதற்கு நம்முடைய கிச்சனில் உள்ள சில மூலிகை பொருட்களே கைகொடுத்து உதவுகின்றன.

கழிவுகள்: இதில் ஒன்றுதான் சீரகம்.. தினமும் சீரகத்தை உணவாக எடுத்து கொண்டோமானால், எடை அதிகரிப்பு தொடர்பான காரணிகளை நிர்வகிக்க அது உதவும்... மேலும், உடலிலுள்ள கொழுப்புகளை விரைவாக கரைக்கும் தன்மை இந்த சீரகத்துக்கு அதிகம் உள்ளது..
சீரகத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, 2 வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதில் மாற்றம் தென்பட ஆரம்பிக்கும்.. இந்த சீரக தண்ணீர், உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுத்து, கலோரிகளை எரிக்க செய்கிறது.
அதாவது, சீரகத்தை ஊறவைத்ததுமே, அதிலிருந்து வெளிவந்த ஊட்டச்சத்து தண்ணீரில் மஞ்சள் நிறத்தில் கலந்து விடுகிறது. சீரக தண்ணீர் மிக குறைந்த கலோரி உள்ள பானம் என்பதால், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, ஆரோக்கியமானதாக மாறுகிறது.
துத்தநாகம்: அதேபோல, அக்ரூட் பருப்பினை சாப்பிட்டு வந்தாலும், கொழுப்புகளை எளிதாக கரைக்கலாம் என்கிறார்கள்.. இந்த அக்ரூட் பருப்பில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, துத்தநாகம் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.. இதிலிருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடல் எடையை குறைக்க பேருதவி புரிவதுடன், நார்ச்சத்துக்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன.
அதேபோல, செலரியை தாராளமாக பயன்படுத்தலாம்.. பார்ப்பதற்கு கொத்தமல்லி மாதிரியே காணப்படும் இந்த செலரி தாவரம், ஆயுர்வேதத்தில் நிறைய பயன்படுத்தப்படுகிறது.. இந்த செலரியில் கலோரிகளே இல்லை. முழுக்க முழுக்க தண்ணீர் மட்டுமே நிறைந்ததுள்ளது.. செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால், கலோரிகள் உடலில் சேராது.
செலரி ஜூஸ்: அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் கழிவுகளை வெளியேற செய்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைக்கிறது. சருமத்துக்கும், உம், உடலுக்கும், முடிக்கும் பாதுகாப்பு தருகிறது. செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
சோம்பு என்று சொல்லப்படும் பெருஞ்சீரகம், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வக்கிறது.. இதற்கு காரணம், துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள், என பல்வேறு விஷயங்கள் இந்த பெருஞ்சீரகத்தில் உள்ளன. உடல் பருமனை குறைக்க, ஆயுர்வேத மருத்துவத்திலேயே, இந்த சோம்பு தண்ணீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது.
தண்ணீர்: இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு, மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது இந்த தண்ணீலில் டீ போட்டும் குடிக்கலாம். வெறும் வயிற்றில் இப்படி சோம்பு தண்ணீரை குடித்து வந்தாலும், உடலிலுள்ள கலோரிகள், கொழுப்புகள் கரைந்து குறைய துவங்கும்.. பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் வளரக்கூடிய சதையை கரைக்க, இந்த சோம்பு தண்ணீர்தான் பெஸ்ட் சாய்ஸ்..!!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications