சர்க்கரை நோயாளி.. "நாட்டு சர்க்கரை"யை சாப்பிடலாமா? வெள்ளை சர்க்கரையைவிட பெஸ்ட் "நாட்டுச் சர்க்கரை"
சென்னை: நாட்டுச்சர்க்கரை உடலுக்கு எந்த விதத்தில் நன்மைகளை தருகின்றன? சர்க்கரை நோயாளிகள் நாட்டு சர்க்கரையை சாப்பிடலாமா?
உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், அதிலும், டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகமாக்குவதே வெள்ளை சர்க்கரைதான். பல் சொத்தை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, குடல்புண், சளித்தொல்லை, இதய நோய், ரத்தம் அழுத்தம், புற்றுநோய் என சிறிய பிரச்சனை முதல் பெரிய பெரிய நோய்கள் வரை வரக்கூடிய வாய்ப்புள்ளது.

இங்கு கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிட வேண்டி உள்ளது.. இந்த சர்க்கரையில் "பிரக்டோஸ்" நிறைய உள்ளதால், உடலில் கொழுப்பை உருவாக்க இதுதான் துணைபுரிகிறது.. அதனால், சர்க்கரையை நாம் அதிகம் எடுத்து கொள்ளும்போது, கல்லீரலில், கொழுப்பு அமிலங்களை உருவாக்கிவிடும். இதுவே கல்லீரலை நேரடியாக சேதப்படுத்தகூடிய அடிப்படை காரணமாகும்..
இதய நோய்கள்: அதைவிட முக்கியமாக, உணவில் அதிக அளவில் சர்க்கரை கொண்டவர்கள், தங்களது உணவில் குறைந்த அளவு சர்க்கரை கொண்டவர்களை காட்டிலும், இதய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அதனால், இதயத்துக்கும் சர்க்கரைக்கும் நேரடி தொடர்பு உள்ளதால், சர்க்கரையை குறைத்து, இதயத்தை காக்க வேண்டி உள்ளது.
வெள்ளை சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி நிறைய சத்துக்கள் இருந்தாலும், கெமிக்கல்களை கலந்துதான், வெள்ளை கலராக மாற்றப்படுகிறது. இந்த சர்க்கரையிலுள்ள "அஸ்பார்ட்டம்" என்ற பொருளும், சல்ஃபர் அளவும் அதிகமாக உள்ளது.. இவைகள்தான் உடலுக்கு கெடுதலை தருகின்றன.
வெள்ளை சர்க்கரை: அதனால்தான், வெள்ளை சர்க்கரையைவிட, நாட்டுச்சர்க்கரை மேலானது என்கிறார்கள். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B6, நியாசின், பாந்தோதெனிக் அமிலம் இப்படி பல சத்துக்கள் அதிகமுள்ளன.
100 கிராம் வெள்ளை சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கிறதாம்.. ஆனால், நாட்டுச்சக்கரையில் கலோரிகள் மிகவும் குறைவு,, அதனால்தான், உடல் எடையை சீராக வைத்து கொள்பவர்கள் நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்துகிறார்கள். நாட்டு சர்க்கரையில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், பாக்டீரியா எதிர்ப்புகளும் அதிகம் என்பால், தொற்றுகள் நம்மிடம் அண்டவிடாமல் தடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு இந்த நாட்டுச்சர்க்கரை மிகவும் நல்லது... காரணம், பொட்டாசியம் நிறைந்த இந்த நாட்டுச்சர்க்கரை, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது.. சருமத்துக்கு பாதுகாப்பை தரக்கூடியது..
வாழைப்பழம்: வைட்டமின் B உள்ளதால், தோலிலுள்ள இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்குவதில் இந்த நாட்டுச்சர்க்கரையின் பங்கு முக்கியமானது.. சருமத்தின் வறட்சித்தன்மையும் நீங்கிவிடும்.. அதேபோல, வாழைப்பழத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து முகத்தில் தேய்த்து, மசாஜ் போல செய்து வந்தால் சருமம் பொலிவாகும்.
அதனால்தான், சருமத்துக்கு பயன்படுத்தும் ஃபேஸ்பேக்குகளில் இந்த நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்துகிறார்கள். உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம். இது ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது..
அஜீரணம்: அஜீரணத்தை நீக்கி, செரிமானத்தை சீராக்குவதிலும், இந்த சர்க்கரையின் செயல்பாடு அதிகம்.. அஜீரண கோளாறுகள் இருந்தால், சுடுநீரில் நாட்டு சர்க்கரை, இஞ்சியை சேர்த்து கொதிக்க விட்டு குடித்தாலே, உடனே அஜீரணம் நீங்கிவிடும்..
அதேபோல, குடல்களையும் சீராக செயல்பட வைக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் இந்த நாட்டுச்சர்க்கரைக்கு உண்டு என்கிறார்கள். ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும் நாட்டுச் சர்க்கரையை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஓமத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சர்க்கரையை கலந்து குடித்தாலே, நெஞ்சு சளி கரைய துவங்கும்.. இதனால், நுரையீரலின் பாதுகாப்பையும் இந்த நாட்டு சர்க்கரை காக்கிறது.
சர்க்கரை நோயாளிகள்: இவ்வளவு நன்மைகள் நாட்டுச்சர்க்கரையில் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும்.. சர்க்கரையில் தீங்கு அதிகம் என்றால், நாட்டு சர்க்கரையில் தீங்கு குறைவு என்று சொல்லலாம். அதற்காக நன்மைகளை தருவதில்லை.. எனவே, சர்க்கரை நோயாளிகள், வெள்ளை சர்க்கரையை போலவே, நாட்டுச்சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு சர்க்கரைகளுக்கு பதிலாக, கருப்பட்டி எவ்வளவோ தேவலாம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications