வெறும் விதை.. முருங்கைக்காயைவிட சர்ப்ரைஸ் தரும் பாருங்க.. சர்க்கரை ஓடிரும்.. அதிசயம் தரும் விதைகள்
சென்னை: எத்தனையோ மரங்களின் விதைகளில் சத்துக்கள் நிறைந்துள்ளன என்றாலும், இதில் பெரிதும் ஆச்சரியத்தை தரக்கூடியது முருங்கையின் விதைகளாகும். எப்படி தெரியுமா?
30-க்கும் மேற்பட்ட ஆன்டி- ஆக்ஸிடன்டுகளை கொண்டிருக்கின்றன முருங்கை விதைகள்.. பெரும்பாலும் இந்த விதைகளை காயவைத்து, பவுடராக்கி பயன்படுத்துவார்கள். இந்த பவுடரை பாலில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை நீங்கும்..

சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் வந்தவர்களும், முருங்கை விதைகளை பொடி செய்து, டீ தயாரித்து குடிக்கலாம் அல்லது சூப்களில் மிளகு சேர்த்து குடித்து வரலாம். கொழுப்புகளை அகற்றுவதில் முருங்கை விதை சூப் சிறப்பாக செயல்படுவதால், இதயத்துக்கு பாதுகாப்பை தருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையையும் அதிகரிக்க செய்கிறது.
இந்த விதைகள் ஆண்களுக்கு மிகவும் நல்லது.. முருங்கையின் விதைகளை நெய்யில் வறுத்து தூள் செய்து, பாலுடன் சேர்த்து காய்ச்சி குடித்து வரும்போது, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதாம்.. நரம்புகளும் வலுப்பெறுமாம். அல்லது முற்றிய முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம். முருங்கை விதைகளுக்கு கொழுப்பை குறைக்கும் தன்மை உண்டு.. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு..
புற்றுநோய்: மெனோபாஸ் நேரங்களில், பெண்களுக்கு உடலில் சத்துக்குறைபாடு ஏற்படும்.. தலைவலி, கால்களில் தசைப்பிடிப்பு, சோர்வு போன்றவைகளாலும் அவதிக்கு ஆளாவார்கள். அதுபோன்ற நேரங்களில், இந்த விதைகள் பெரிதும் கைகொடுக்கின்றன. தூக்கம் சரியாக வராமல் அவதிப்படுபவர்கள், இந்த முருங்கை விதைகளை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்..
அதேபோல கால்சியம் நிறைந்த இந்த விதைகளை சாப்பிடும்போது, பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதித்தன்மை கிடைக்கும். அத்துடன், மூட்டுகளின் இணைப்புகளில் ஏற்படும் வலிக்கும் இந்த முருஙகை விதைகள் அருமருந்தாகின்றன.
கால்சியம்: கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகளுக்கு பலம் தருவதுடன், ஆர்த்ரைடிஸ் வராமலும் முன்கூட்டியே தடுக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன... அத்துடன், எலும்புகளுக்கு ஊட்டம் செலுத்தி, மஜ்ஜைகளை பலப்படுத்தி, ரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யக்கூடும் ஆற்றல் மிகுந்ததாம் இந்த விதைகள்.
முருங்கைக்காய்களை சமைக்கும்போது, அதன் விதைகளை மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.. காரணம், இந்த விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் பூச்சிகள், புழுக்கள் வெளியேறும்.. விதைகளை தனியாக சாப்பிட பிடிக்கவில்லையானால், சாம்பார், புளிக்குழம்பு, குருமா தவிர, மட்டடன் குழம்பிலும் சேர்த்து சாப்பிடுவார்கள்.
தலைமுடி: இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால்தான், முருங்கை விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.. புரோட்டீனும், நிறைவுற்ற கொழுப்புகளும் அடங்கிய இந்த எண்ணெய், தலைமுடியின் அபார வளர்ச்சிக்கு நிறையவே உதவுகிறது.
இப்படி பல்வேறு நன்மைகளை விதைகள் தந்தாலும்கூட, மருந்தாக உட்கொள்ளும்போது, மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மை தரும்.












Click it and Unblock the Notifications