சர்க்கரை நோயாளிகள்.. இந்த பருப்பை சாப்பிடலாமா? அடடே இது தெரியாம போச்சே.. நீரிழிவு நோயாளிகள் கவனிங்க
சென்னை: சர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகள் சாப்பிடலாமா? அதிலும் பாதாம் பருப்பை சாப்பிடலாமா? என்பதில் சந்தேகம் நிலவியபடியே உள்ளது.
பாதாம் பருப்புகள் ருசியானவை.. அதிக சத்துக்களை உடையவை.. உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதற்கு இந்த பாதாம் துணைபுரியும்.. அதிலும் ஊறவைத்து இந்த பருப்பை சாப்பிட்டால், நன்மைகள் பலமடங்கு பெருகும்.

உடல் எடை: தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினையும் தீரும்.. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்வதில் பாதாம் உதவுகிறது. காரணம், இந்த பாதாமில் கால்சியமும், புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்களும் நிரம்பி உள்ளன. பாதாமை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்கள் நம்மை எளிதில் தாக்காது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதய கோளாறுகள், சருமக் கோளாறுகள், தலைமுடி பிரச்சினைகள், ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, இப்படி இன்னும் ஏராளமான பிரச்சனைகளை இந்த பாதாம் பருப்பு சரிசெய்ய துணை புரிகிறது. இவைகள் எல்லாம் பொதுப்பலன் என்றாலும், உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கினை இந்த பருப்பு வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முந்திரியை எடுத்து கொள்ளலாம்.
மக்னீசியம்: காரணம், பாதாமில் உள்ள சத்துக்களிலேயே அதிகமானது மக்னீசியம்.. இந்த மக்னீசியம் போதுமான அளவு இருந்தால்தான், டைப் 2 டயப்பட்டீஸ் தொந்தரவு வராமல் தவிர்க்க முடியும். அந்தவகையில், முந்திரி பருப்புகள் பயன்படுகிறது. மேலும், பாதாம் சாப்பிட்டால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும் என்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்திவிடுமாம். முந்திரியில் நிறைய நார்ச்சத்து இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பையும் தடுத்து நிறுத்துகிறது..
அதனால், உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, பாதாம் பருப்பை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயையும் தடுக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.. அந்தவகையில், தினமும் 30 கிராம் பாதாம் பருப்பை மட்டுமே சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை நோயாளிகள்: முந்திரியை போலவே, சர்க்கரை நோயாளிகளுக்கு, கடலை பருப்பு மிகவும் நல்லது என்கிறார்கள்.. அதேபோல, பொட்டுக்கடலை, பாசிப்பயறு, தோல் நீக்காத உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை போன்றவைகளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியவை. அதைவிட முக்கியமாக, இந்த பாதாமில் குறைவான கலோரி உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தினமும் 5 பாதாம் பருப்பை சாப்பிடலாம் என்கிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications