அடிமட்டமே அதிரப்போகிறது! "அவரும்" தவெக பக்கம் வர்றாராமே.. ஆட்டம் காணும் எடப்பாடியின் ஒற்றை தலைமை?
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து, அந்த கட்சியில் ஏகப்பட்ட உட்கட்சிப் பூசல்களும், ஏகப்பட்ட அதிகாரப் போட்டிகளும் உச்சக்கட்டத்தை எட்டி விட்டன.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு எதிராக, கட்சியின் தூண்களாக கருதப்பட்ட மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கியிருப்பது அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது..!!!
அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன், கே.சி. வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி, கோ. அரி உள்ளிட்ட கட்சியின் 9 முக்கிய மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த கட்சிப் பதவிகள் வேண்டாம் என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு, பரபரப்பையும் ட்விஸ்ட்டையும் தந்துள்ளனர்.

அதிமுக மூத்த தலைவர்கள்
தாங்கள் கட்சியின் அடிப்படைத் தொண்டர்களாக மட்டுமே தொடர விரும்புவதாகவும், தங்களின் விருப்பத்திற்கு மாறாக வழங்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் அறிவித்துள்ளனர்.
கட்சிப் பதவிகளை ஏற்று சுதந்திரமாக பணியாற்ற முடியாத ஒரு முட்டுக்கட்டை சூழலை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி வைத்துள்ளதாக இவர்கள் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருப்பது, அதிமுக தொண்டர்களிடம் குழப்பத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
கொங்கு அதிமுக புள்ளிகள்
இன்னொருபக்கம், தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றத்தினால், , அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் விலகி ஆளுங்கட்சியான தவெக நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வென்ற அதிமுக, தவெக அரசு மெஜாரிட்டியை நிரூபித்த போதே 25 எம்எல்ஏக்களின் ஆதரவோடு பலவீனமடைந்தது.
ஏற்கனவே மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்ட நிலையில், இப்போது புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இரு முக்கிய முன்னாள் அமைச்சர்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளைத் துறந்துள்ளனர்.
நாளை இணைப்பு விழா
இதன் அடுத்தக்கட்டமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 5 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நாளை காலை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியில் இணையவுள்ளனர்.
நாளை சாயங்காலம், இவர்கள் அனைவரும் முதல்வர் விஜயை நேரில் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.. ஆனால், இந்த சரிவு இத்துடன் நின்றுவிடவில்லை. அதிமுகவின் முக்கிய புள்ளிகளான மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி.சண்முகம் மற்றும் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தவெகவில் இணைவதற்கு இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
சி.வி.சண்முகம் தன்னுடைய ஆதரவாளர்களான 5 எம்.எல்.ஏ.க்களுடன் இணையப் பேச்சு நடத்தி வரும் நிலையில், மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க த.வெ.க. தரப்பும் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, மாநில அளவிலான கட்சிப் பதவிகள் மற்றும் வாரியத் தலைவர் பதவிகளை அவர்கள் கேட்டு வருவதாகவும், கட்சியில் இணைந்த பிறகு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என தவெக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான கட்சித் தாவல்கள் ஆளுங்கட்சியான தவெகவை அடிமட்ட அளவில் மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏனென்றால் அதிமுகவின் அனுபவமிக்க, வாக்கு வங்கி வைத்துள்ள மூத்த தலைவர்கள் தவெகவில் இணைவது, அக்கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ட்ராங்கான கட்டமைப்பை கண்டிப்பாக வலுத்துப்படும்.. அதுவும் கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் தவெகவின் செல்வாக்கு பல மடங்கு உயர இது நிச்சயம் வழிவகுக்கும்.
எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்
அதேசமயம், அதிமுக என்ன செய்ய போகிறதென தெரியவில்லை. இப்படியொரு இக்கட்டான நிலையில், அதிமுக தன்னுடைய உத்திகளை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தனது ஒற்றை தலைமை போக்கை தளர்த்தி, அதிருப்தியில் உள்ள மிச்சமுள்ள நிர்வாகிகளை நேரில் அழைத்துப்பேசி சமாதானப்படுத்த வேண்டியது உடனடி தேவையாக உள்ளது.. இல்லாவிட்டால் தொண்டர்களின் பலத்தை இழந்து, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையையும் முழுமையாக இழக்கும் அபாயம் ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!














Click it and Unblock the Notifications