Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கத்தை கத்தையா வருதா தலைமுடி? ஒரே பூவின் மேஜிக் பாருங்க.. கருகருன்னு தலைமுடிக்கு இதான் "பெஸ்ட் ஆயில்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமுடி கொட்டுவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும். அந்தவகையில் நமக்கு கை கொடுத்து உதவுவது ஆவாரம்பூ தான்.

நம்முடைய தலைமுடி கொட்டுவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.. ஹார்மோன் குறைபாடுகள் பிரதான காரணமாக உள்ளன.. உடலில், ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும் முடி கொட்டலாம். அதனால், ரத்தசோகை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Do you know the Health Benefits of Avaram Pookkal and 5 Major Super Avaram Poo tips to grow the Healthy Hair

குறைபாடுகள்: அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும் தலைமுடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்.. அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்..

அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம். எனவே, நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.

பொடுகு பிரச்சனை: அதேபோல தலைமுடியையும் சிரத்தையெடுத்து, பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. பெரும்பாலானவர்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால், தலைமுடி கொட்டும்.. இதுபோன்ற பிரச்சனை இருந்தால், ஆவாரம் பூ பொடி,வெந்தயப்பொடி, கற்றாழ ஜெல் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து, உச்சந்தலையில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து, தலையை அலசி வந்தால் பொடுகு பிரச்சனை விரைவில் நீங்கும்..

ஆவாரம் பூ, வெந்தயம், மருதாணி மற்றும் கறிவேப்பிலை இவைகளை எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தடவி வந்தால், முடி வளர்ச்சி அதிகமாகும்.. அல்லது ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய் பால் போன்றவற்றை சமமாக அளவு எடுத்து அரைத்து வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, நன்றாக வளரும்.

தலைமுடி: நிறைய பேருக்கு உஷ்ணம் காரணமாக தலைமுடி கொட்டும்.. இப்படி பிரச்சனை இருந்தால், ஆவாரம்பூக்களை, தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து தலைக்கு குளித்து வந்தால் குளிர்ச்சி பெறலாம். சிலருக்கு வறண்ட கூந்தல் இருந்தால், தேங்காய் எண்ணெய்யில் ஆவார பூக்களை சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைமுடியின் வறண்ட நிலைமை மாறும்.

வழுக்கை தலை உள்ளவர்கள், ஒரு கை பிடியளவு ஆவாரம் எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தேய்த்து வந்தால், வழுக்கை நீங்கி முடிகள் வளர துவங்கும்.

ஆவாரம் பூக்கள்: தலைமுடிக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கு இந்த ஆவாரம் பூக்கள் பலவழிகளில் மருந்தாகிறது. வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள், ஆவாரம் பூக்களை தண்ணீர் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும். கொழுப்பையும் குறைக்கவும் இந்த தண்ணீர் உதவும். உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, போன்றவையும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+