குழந்தைபேறு கிடைக்க டீ, காபியை மறந்துடுங்க! ஆரோக்கியத்தை அள்ளித் தரும் சப்பாத்திக் கள்ளி! அருமருந்து
சென்னை: சப்பாத்திக் கள்ளி பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. வறண்ட நில தாவரத்தில் இருந்து கிடைக்கும் இந்த சப்பாத்தி கள்ளியில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?
சப்பாத்திக் கள்ளி என்ற பெயரை சொன்னதும் நம் நினைவுக்கு வருவது பாலைவனம்தான். இந்த சப்பாத்திக் கள்ளிக்கு தண்ணீரே தேவையில்லை. அது பாட்டுக்கு வளர்ந்து விடும்.

இது நா வறட்சியை போக்க வல்லது. இதை ஆடு மேய்ப்பவர்கள் எடுத்து உண்பார்கள். வெயில் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாக்கும் சக்தி கொண்டது. ஆனால் இதைத் தவிர இவற்றில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
இந்த சப்பாத்திக் கள்ளியில் உள்ள பழம் தொடர்ந்து இருமலை போக்கும். கக்குவான் இருமலுக்கும் நல்லது. பருவகாலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலை எதிர்த்து போராடும். கண் பார்வையை மேம்படுத்தும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோயாளிகள் உண்ணலாம்.
அது போல் வீக்கம் இருக்கும் இடங்களில் இதை பூசினால் எப்படிப்பட்ட வீக்கமும் குறைந்துவிடும். சப்பாத்திக் கள்ளி பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக இருக்கும். அத்துடன் ரத்த நாளங்களில் சேரும் கழிவுகளை அகற்றி இதய நோய்களை தடுக்கிறது.
இந்த பழத்தை பறிக்கும் போது ஜாக்கிரதையாக பறிக்க வேண்டும், கொஞ்சம் ஏமாந்தாலும் முட்கள் குத்திவிடும். இந்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு பண்ண வேண்டும். இல்லாவிட்டால் உதடுகள், ஈறுகள், தொண்டையில் முட்கள் சிக்கிக் கொள்ளும். இந்த சப்பாத்தி கள்ளியில் இருக்கும் ஜெல்லை எடுத்து அசுத்தமான நீரில் போட்டால் நீர் எல்லாம் சுத்தமாகிவிடும்.
இந்த சப்பாத்திக் கள்ளியுடன் வெள்ளைக்கல்லை அரைத்து போட்டால் அக்குளுக்குள் இருக்கும் கட்டி கறைந்துவிடும். இந்த பழத்தை நாகதாளி என்றும் அழைப்பார்கள். இதை சாப்பிட்டால் குரல்வளை, பித்தப்பை, மலக் குடல் சார்ந்த அனைத்து நோய்களும் நீங்கும். ரத்தம் கக்குதலும் தீரும். சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது. கல்லீரல் பாதிப்பும் நீங்கும்.
கருப்பையில் சினை நீர் கட்டிகளை கரைப்பதற்கு இந்த சப்பாத்தி கள்ளி உதவும். இந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும். கரு முட்டை வளர்ச்சியும் சீராகும். அதுவும் கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் குழந்தை அழகாக பிறக்கும். இதை குங்குமப்பூவை விட இந்த சாப்பாத்திக் கள்ளி பழம் சிறந்தது என்பார்கள். விந்தணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிடலாம். ஆனால் இந்த பழத்தை சாப்பிடும் போது டீ, காபி கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications