கொத்து கொத்தா தொங்கும் "மல்லிகை பூக்கள்".. அதென்ன மல்லிப்பூ தண்ணி.. ஊளைச்சதையை ஒழிக்கும் அற்புத நீர்
சென்னை: உலக நாடுகளில் பூக்கள் மருத்துவம் என்பது மிகப்பிரபலமான ஒன்றாகும்.. அந்தவகையில், மருத்துவத்துக்கு பயன்படும் பல்வேறு மலர்கள் இருந்தாலும், அதில் மல்லிகைப்பூ முக்கியமானதாகும்.
வாசத்துக்கு மட்டுமல்ல, வாழ்வின் ஆயுளை பெருக்கவும் இந்த மல்லிகைப் பூ உதவுகிறது.. குறிப்பாக, பெண்களுக்கு இந்த மல்லிப்பூக்கள் தரும் நன்மைகளை பட்டியலிட்டு சொல்ல முடியாது.
வெறுமனே தண்ணீரில், ஒரு கைப்பிடி மல்லிகை பூக்களை கொதிக்க வைத்து, அதை பாதியாக சுண்டும் வரை காய்ச்சி குடித்து வந்தாலே ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

- இந்த மல்லிகை தண்ணீர் உடலிலுள்ள உஷ்ணத்தை போக்குகிறது
- குளிர்ச்சி நிறைந்த இந்த பூக்களின் தண்ணீர் வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை அகற்றுகிறது
- சிறுநீர் கற்கள் கரைகின்றன.. சிறுநீர் பாதையில் எரிச்சல்கள் தணிகின்றன
- அஜீரண கோளாறுகள் இருந்தால், இந்த தண்ணீரை காலை, மாலை இருவேளை குடித்து வந்தாலே, அஜீரணம் நீங்கிவிடும்
- மலச்சிக்கலும் நீங்குவதுடன், குடல் ஆரோக்கியம் காக்கப்படும். குடற்புழுக்களும் வெளியேறிவிடும்.
- மாதவிடாய் கோளாறுகள் சீராகும் - அத்துடன், கருப்பை நோய்களும் நீங்கும்
- கண் பார்வைகள் கூர்மை பெறும் - கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சியும் அடியோடு குறைந்துவிடும்
- காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை இந்த பூக்களின் தண்ணீருக்கு உண்டு.
- கமகமக்கும் இந்த பூவின் தண்ணீர், கிருமி நாசினியாகவும் விளங்குகிறது

- ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது
- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த தண்ணீர், கொழுப்புகளை எரித்து எடையை குறைக்க உதவுகிறது
- இந்த தண்ணீரை தலைக்கு தேய்த்து குளிக்கும்போது, நல்ல மணமும், ஈரப்பதமும் கூந்தலுக்கு கிடைக்கிறது.. - மிகச்சிறந்த கண்டிஷனராகவும் உதவுகிறது
- சரும பராமரிப்பு ரெசிபிகளில் இந்த தண்ணீரை சேர்த்து பயன்பத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்












Click it and Unblock the Notifications