இந்த காய் வசீகரிக்கும்! ஆனா போதை மருந்தல்ல! "இயற்கை வயாகரா" விந்தணுவை பெருக்கும்! அளவுதான் முக்கியம்
சென்னை: யாரையும் வசீகரிக்கும் தன்மை கொண்ட இந்த அற்புதமான மூலிகைக்கு எத்தனை எத்தனை நன்மைகள்?
உணவே மருந்து... என்ற நிலை மாறி தற்போது மருந்தே உணவு எனும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இதற்கு காரணம் நாம் நவீனம் நவீனம் என்ற பெயரில் பாக்கெட் ஐட்டங்களை உண்டு "மகிழ்வது"தான்.

நம் பாரம்பரிய மூலிகைகளை பதப்படுத்தி வெள்ளைக்காரன் அவன் நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறான். அதையே இங்கு இறக்குமதியும் செய்கிறான். அதை வாங்கி ரசித்து ருசித்து சாப்பிடுகிறோமே! என்ன கொடுமை இது என கேட்கத் தோன்றுகிறது.
சமையலுக்கு பயன்படுத்தும் அத்தனை பொருட்களிலும் ஒவ்வொரு சத்து இருக்கிறது. எந்த பொருளையும் நாம் தேவையில்லாமலோ அதற்கு பயன்களே இல்லாமலோ பயன்படுத்துவதில்லை. அந்த வகையில் இத்தனை நாட்களாக இது ஏதோ வாசனைக்காக பயன்படுத்தி வருகிறோம் என நினைத்திருந்த ஜாதி பத்திரியின் நலன்களை பார்ப்போம்.
ஜாதிக்காயில் இருந்து எடுக்கப்படுவதுதான் ஜாதிபத்திரி. இது மெலிய பூ போல் கொத்து கொத்தாக இருக்கும். லேசான பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த ஜாதிபத்திரி உணவுக்கு நல்லதொரு வாசனையை கொடுக்கும். மேலும் இந்த ஜாதிக்காயில் போதை பொருள் இருக்கிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அது போதையை தருகிறது. அதற்காக அது போதையூட்டும் பொருள் என நினைக்க வேண்டாம்.
இந்த ஜாதிக்காயில் இனிப்புச் சுவை இருக்கிறது. அதன் பெயர் மைரிஸ்டிசின். இது தோல் சுருங்காமல் என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மன அழுத்தத்தை போக்கும், நல்லதொரு தூக்கத்தை கொடுக்கும். குழந்தைப் பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமில்லாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். கர்ப்பப்பை பிரச்சினைகளையும் தீர்க்கும்.
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலி, மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலியையும் போக்கும் .முக்கியமாக இது ஒரு இயற்கையான வலி நிவாரணி. காமத்தை பெருக்கும். சீதபேதி குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்லதொரு மருந்து. பல் வலி பட்டுனு போகும். உடல் வெப்பத்தையும் போக்கும். வாயுத்தொல்லையை நீக்கும். இந்த ஜாதிக்காயை உரசி கண்களுக்கு கீழ் தேய்த்தால் கருவளையம் மறையும். பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு சமயங்களில் இந்த ஜாதிக்காயை விளக்கில் லேசாக சுட்டு அதை மண் அகலில் ஒரே ஒரு உரசு உரசி (அதற்கு மேல் கூடாது) தாய்ப்பாலில் கலந்து பாலாடையில் ஊற்றிவிடலாம்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications