பில்கேட்ஸுக்கு ஆரோக்கிய ரகசியத்தை சொன்ன பிரதமர் மோடி.. அது என்ன கதா டீ? எப்படி செய்வது?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருவது கதா டீ என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆயுர்வேத மூலிகைகளால் ஆன கதா டீயில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கின்றன என்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, உலக பணக்காரர் பில்கேட்ஸுடன் உரையாடிய வீடியோவில்தான் இந்த கதா டீ குறித்து அவர் கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு வந்த பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போதுதான் இருவரும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை பேசினர். பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் நான் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்துவிடுவேன். எழுந்து யோகா செய்துவிட்டு கதா டீ குடிப்பேன்.
இந்த டீ எனக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவிய போது இந்த கதா டீயை குடிக்குமாறு மத்திய அரசு சார்பில் மக்களுக்கு அறிவுறுத்தினோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த டீயை நான் ஏன் குடிக்கிறேன் என்பதை சொன்னேன். கதா என்பது மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இமயமலை மூலிகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இதில் துளசி, லவங்க பட்டை, ஏலக்காய், மிளகு, மல்லி, திராட்சை உள்ளிட்டவை உள்ளன. இது அனைத்திற்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதனால் தினமும் ஒரு முறை இந்த ஆயுர்வேத டீயை குடிக்க வேண்டும். இந்த டீயை குடித்தால் தொற்று நோய் வராது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
இந்த டீயை தயாரிக்க தேவையான பொருட்களை பார்க்கலாம்.
துளசி இலைகள்- 1 ஸ்பூன்
ஏலக்காய் 1 ஸ்பூன்
பட்டை- 1 ஸ்பூன்
இஞ்சி - 1 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
திராட்சை- சிறிதளவு (காய்ந்தது கருப்பு அல்லது பச்சை, கருப்பு சிறந்தது)
தண்ணீர்- 2 முதல் 3 கப்
தேன் அல்லது கருப்பட்டி- சிறிது
எலுமிச்சை சாறு- சிறிது

தயாரிப்பது எப்படி
முதலில் மிளகு, பட்டை ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகள் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். பிறகு பொடியாக்கிய மிளகு, பட்டையை போடவும். தண்ணீர் பாதியாக குறைந்த பிறகு திராட்சை சேர்க்கலாம். பிறகு வெல்லம் சேர்க்கவும். கடைசியில் ஆறியவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். நீங்கள் வெல்லம் போடாமல் தேன் சேர்ப்பதாக இருந்தால் சற்று ஆறியதும் தேன் சேர்க்கலாம்.

இதில் பூண்டு, புதினா இலைகளை கூட விருப்பப்பட்டால் சேர்க்கலாம். அது போல் மஞ்சள் தூள் கலந்த பாலை இரவு நேரங்களில் குடித்தல் நல்லது. இதை மோடி தங்க பால் என்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications