வெறும் பூ போதும்.. இதய நண்பன் வெண்தாமரை.. கருகருனு தலைமுடி வேணுமா? அப்ப வெண்தாமரை பூக்களை விடாதீங்க
சென்னை: ஆயுர்வேத மருத்துவத்தில் தவிர்க்க முடியாதது வெண்தாமரை பூக்களாகும்.. உடலுக்கு மட்டுமல்லாமல், மனதுக்கும் சேர்த்து நன்மைகளை தரும், இந்த குளிர்ச்சி பூக்களின் மகத்துவம் என்னென்ன தெரியுமா?
செந்தாமரை + வெண்தாமரை என்று 2 வகையான தாமரைகள் உள்ளன.. இதில் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது இந்த வெண்தாமரைதான்.. வைட்டமின் B,C, இரும்புசத்து, தாமிர சத்து என அனைத்துமே இந்த வெண்தாமரையில் காணப்படுகின்றன.

அதாவது, வெண்தாமரையில் மட்டும் 20 பங்கு தாமிர சத்து இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தாமிரசத்துக்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் பேருதவி புரிகிறது.. பெரும்பாலும், இந்த பூக்களில் கஷாயம் செய்து குடித்தால் நிறைய நன்மைகளை தரும்..
சரும பாதுகாப்பு: அல்லது இந்த தாமரையின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் கலந்து குடித்தாலும் உடல் சூடு தணியும். பித்தமும் தணியும். சரும எரிச்சலும் தணியும். இந்த வெண்தாமரையில் சர்பத் போல தயாரித்து குடித்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற கோளாறுகள் நீங்கும்.
இந்த வெண்தாமரையுடன் நன்னாரி, மற்றும் வேட்டிவேர் இவைகளை சமஅளவு எடுத்து பொடி செய்து 5 கிராம் அளவுக்கு வெந்நீரில் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக பிரியும்.. அதேபோல, இந்த தாமரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் போல வைத்து இரவு துங்கும்போது குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்..
கஷாயம்: வெண்தாமரையுடன், சுக்கு, ஏலக்காய், ஓரிதழ் தாமரை என அனைத்தும் சேர்த்து பொடி செய்து, தினமும் 2 கிராம் பொடியை சாப்பிட்டு வந்தாலே இதய நோய்கள் குணமாகும். மூளை நரம்புகள் பலம் பெறும். மூளைக்கு பலத்தை தரக்கூடியது இந்த வெண்தாமரைகள்.. இதனால் ஞாபக சக்திகள் தூண்டப்படுகின்றன.. இதயம் தொடர்புடைய பல நோய்களை இந்த வெண்தாமரை பூ கஷாயம் போக்கக்கூடியது..
ஜன்னி நோய் வந்தால்கூட, அதற்கும் இந்த கஷாயம்தான் உதவுகிறது.. இந்த பூக்களை காய வைத்து பொடியாக்கி, தினமும், ஐந்து டீஸ்பூன் பொடியை, ஒன்றரை டம்ளர் நீரில் சேர்த்து சுண்ட காய்ச்சி குடித்து வந்தால், உயர் ரத்த அழுத்தமும் சீராகும்.
பித்தம் நீங்கும்: வெண்தாமரை பூக்கள், இலை, தண்டு, கிழங்கு, இந்த நான்கையும் தலா 100 கிராம் எடுத்து, அதை சாறு பிழிந்து, முக்கால் கிலோ நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் கொதிக்க விட்டு, பிறகு ஆறவைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

இதனை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், உடலிலுள்ள பித்தம் நீங்கும்.. உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. உஷ்ணத்தால் ஏற்படும் தலைமுடி உதிர்வுகள், கண் எரிச்சல் போன்றவையும் குணமாகும்.. மங்கிய கண்பார்வையும் தெளிவுபெறும்.. நரம்புகளை பலப்படுத்தக்கூடிய இந்த எண்ணெய், காயங்கள், புண்கள் என ஆறாத ரணங்களையும் ஆற்றிவிடும்.
தலைமுடி: அல்லது, தாமரைப்பூ, அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும். இப்போது, பாத்திரத்தில், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, அதில் இந்த உருண்டையை சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து வைத்து கொள்ளலாம். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் பூசி வந்தால், கூந்தல் உதிர்வது நிற்பதுடன், இளநரையும் சேர்ந்தே மறைந்துவிடும்.












Click it and Unblock the Notifications