மீனில்..சூப்பர் மீன் இதான்.. சர்க்கரை நோயாளி சாப்பிட வேண்டிய மீன்கள்.. மத்தி மீன் கிடைச்சா விடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்கள் சாப்பிடுவது பெருத்த நன்மைகளை தரும் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் மீன்கள் சாப்பிடலாமா? எந்தெந்த மீன்கள் சாப்பிடலாம்?

இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதிலும், இதய நோய்கள் போன்ற அபாயத்தை குறைப்பதிலும், புரதங்கள், வைட்டமின் D, B5 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒமேகா 3 அமிலமாகும்.

Do you know the Health Benefits of Mackerel Fish and Mathi Meen, Sankara Fish is the Best for Diabetics

நீரிழிவு நோயாளிகள்: இந்த ஒமேகா 3 அமிலங்கள் அதிகமாக உள்ளது மீன்களில்தான்.. அந்தவகையில், கொழுப்பு மீன்கள் கண்டிப்பாக நீரிழிவு ஆபத்தை நிச்சயம் குறைப்பதாக சொல்கிறார்கள்.

சால்மன், ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.. இதனால், நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைவதுடன், உடலிலுள்ள இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இந்த மீன்கள் தூண்டுகோலாகின்றன. அதிக புரதச்சத்து நிறைந்த உணவு வகையில் இந்த மீன்கள் முக்கியமானதாகும்.. வளர்ச்சிதை குறைபாட்டையும் இந்த மீன்கள் குறைக்கின்றன

அதேபோல, ஜிலேபி கெண்டை, டுனா மீன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம்.. சங்கரா மீனை எடுத்து கொண்டால், இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களும் தடுக்கப்படுகின்றன. சங்கரா மீனிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

இன்சுலின்கள்: அதுமட்டுமல்ல, இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் சங்கரா மீன்கள் பெரிதும் பயன்படுகின்றன.. இதிலுள்ள வைட்டமின் பி12, நரம்பு செல்களுக்கும், ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கவும் உதவுகிறது.

மத்தி மீன்களை எடுத்துக் கொண்டால், 100 கிராம் மத்தி மீனில், புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.. இவை அனைத்தையும்விட, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால், இதய நோய்கள் அத்தனைக்கும் இந்த மத்தி மீன்கள் மருந்தாகின்றன.

மத்தி மீன்கள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைரியமாக சாப்பிடக்கூடியது இந்த மத்தி மீன்.. இதனால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். நீரிழிவு வராமல் தடுக்கவும் இந்த மத்தியை தொடர்ந்து சாப்பிடலாம். இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கவும் மத்தி மீன் உதவி செய்கிறதாம்.

Do you know the Health Benefits of Mackerel Fish and Mathi Meen, Sankara Fish is the Best for Diabetics

கானாங்கெளுத்தி: கானாங்கெளுத்தி என்று சொல்லக்கூடிய அயிலை மீன், புரோட்டீன் அதிகமுள்ள மீன்களாகும்.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.. சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைவதுடன், கண்களில் வரும் பாதிப்புகளை தடுத்து நிறுத்தக்கூடியது.. இந்த மீன்களை சாப்பிட்டால், மாலைக் கண் நோய் வருவதும் தடுக்கப்பட்டுவிடுமாம்.

இந்த மீன்கள் நல்லவை என்றாலும், சர்க்கரை நோயாளிகள் சுமார் 140 கிராம் சமைத்த மீன்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால், ஆரோக்கிய வாழ்க்கையை பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+