வெங்காயத்தை உரித்துவிட்டு! தோலை குப்பையில் போடுறீங்களா? இனி அந்த தப்பை செய்யாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்காயத்தை உரித்துவிட்டு அதன் தோலை தூக்கி குப்பையில் போடுகிறீர்களா? இனி தயவு செய்து அந்த தவறை செய்யாதீர்கள்.

வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை என்பார்கள். இதற்குத்தான் சிலரை திட்டும் போது கூட வெங்காயம் என்பார்கள். அதாவது மூளையில்லை என்பதுதான் அதன் பொருள்.

Do you know the health benefits of Onion skin

அது போல் கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம் என்பார்கள். அதாவது வெங்காயத்தை உரித்தாலோ நறுக்கினாலோ கண்களில் இருந்து தாரை தாரையாக தண்ணீர் வரும். இதற்கு காரணம் அதில் ஒரு விதமான அமிலம் இருப்பதுதான்.

வெங்காயம்: வெங்காயத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதில் உள்ள கந்தகம் நிறைய எண்ணெய்யானது நம் கண்களில் உள்ள கண்ணீரை உற்பத்தி செய்கிறது. கோடை காலத்தில் பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது வெப்ப வாதத்திலிருந்து தற்காத்து கொள்ள உதவும். அஜீரணத்தை சரி செய்கிறது.

மேலும் பாலியல் உணர்வுகளை தூண்டும் அளவுக்கு விரைப்புத்தன்மையை அதிகரிக்கிறது. வெங்காயத்தை அரைத்து தலை முடியில் போட்டால் அது பொடுகை ஒழித்து முடியின் வேர்களை வலுவாக்குகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் இந்த வெங்காயத்திற்கு உள்ளது. அது போல் உயர் ரத்த அழுத்தத்திற்கும் சிறந்த மருந்து.

குடல் பிரச்சினை: இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்பு இருக்கிறது. வெங்காயத்தில் உள்ள குவர்செட்டின் என்பது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் கூட இந்த வெங்காயத்தை உட்கொண்டால் அது குடலில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து வயிற்றுக்கு இதம் அளிக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வெங்காயம் அருமருந்து ஆகும். இந்த வெங்காயத்தில் உள்ள குவர்செட்டின், ஃபிசிடின், அப்பிஜெனின் ஆகியவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆஸ்துமாவுக்கு வெங்காயம் ஒரு நல்ல தீர்வு. நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. இருமலுக்கும் வெங்காயம் சூப்பரான மருந்து.

வெங்காயத்தில் நிறைய சத்துகள்: இப்படி வெங்காயத்தில் நிறைய சத்துகள் இருப்பதை போல் வெங்காய தோலிலும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை பற்றி தெரிந்தால் இனி தோலை தூக்கி போட மாட்டீர்கள். வெங்காயத் தோலில் நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. இது செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஃபிளவனாய்டுகள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக உள்ளது.

இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தருகிறது. வெங்காயத் தோலில் வைட்டமின்கள் சி, ஏ, கால்சியம், பொட்டாசியம், மினரல்கள் உள்ளன. இவ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. எலும்புகள் வலிமையாக இருக்கவும் உதவுகின்றன. இது மன உளைச்சலை குறைக்கிறது. கேன்சர் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை குறைக்கின்றன.

மூட்டு வலி: இது மூட்டு வலியை குணப்படுத்தும். சருமத்திற்கு நல்லது. சருமத்தில் உள்ள சிவப்பை குறைக்க உதவும். இந்த வெங்காயத்தை சாலட்டிலும் தயிர் சாதம், கூழ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம். வெங்காயத்தின் வெளிப்புற தோலில் பிக்மென்ட்ஸ் அதிக அளவில் உள்ளன. இதனால் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு கலந்த பிரவுன் ஆகிய நிறமிகள் கிடைக்கின்றன. இவற்றை கொண்டு துணிகள், முட்டைகள், முடிகளுக்கு வண்ணம் பூசிக் கொள்ளலாம்.

செடிகளுக்கு இயற்கை உரம்: இந்த வெங்காயத்தின் தோல்களை செடிகளுக்கும் உரமாக பயன்படுத்தலாம். வெங்காயத் தோலை சேகரித்து மணலில் கலந்து 15 நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். பிறகு நன்றாக கலந்து எடுத்தால் இயற்கை உரம் தயார். அது போல் செடிகளில் பூச்சி ஏதாவது பாதித்தாலும் அதற்கு வெங்காய தோலை மிக்ஸியில் அடித்து செடிகளின் ஓரத்தில் போடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+