வல்லாரை கீரை.. வல்லமை தரும் கீரை.. ஞாபக சக்தி ஜாஸ்தியாகிடும்.. ஆனாலும் இப்படியொரு சிக்கல் இருக்குதே
சென்னை: வல்லாரை கீரையை சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும் என்கிறார்களே? இதற்கு என்ன காரணம்? நினைவுத்திறனை ஏற்படுத்தி கொள்ள வல்லாரையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. வல்லாரையிலுள்ள வைட்டமின் B6, B1 மற்றும் ஃபோலிக் ஆசிட் குடல் ஆரோக்கியத்தை காக்கின்றன.. வல்லாரையில் உள்ள ஏசியாடிகோசைட் என்ற பொருளானது, தோல், கூந்தல், நகங்களை பாதுகாக்கிறது.

சத்துக்கள்: கால்சியம், பொட்டாசியம் வைட்டமின் K, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வல்லாரையில் உள்ளதால், எலும்புகள், பற்கள் உறுதியாகின்றன. முக்கியமாக, இதிலுள்ள ஆஸ்டியோகால்சின் என்ற புரதம், எலும்பு திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.. இந்த கீரையிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள், செல்களின் ஆரோக்கியத்தை சரியான முறையில் பராமரிக்கிறது.
ரத்தசோகை உள்ளவர்கள், வல்லாரையை வதக்கி சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்தமும் விருத்தியாகும். ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் இந்த வல்லாரை.
குறைபாடுகள்: சருமத்துக்கு இந்த வல்லாரை கீரையை பயன்படுத்துவார்கள்.. நமைச்சல், எரிச்சல், புண்கள் போன்ற குறைபாடுகள் இருந்தால், வல்லாரையை கழுவி நன்றாக அலசி, தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வந்தால் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர வியாதிகள் நம்மை நெருங்காது.
கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி வல்லாரை கீரையை சாப்பிடலாம்.. இந்த கீரையின் சாறு குடித்தால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடல் வலுவாகும் என்பார்கள். மாதவிடாய் நேரங்களிலும் வல்லாரை சாறில் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
மாத்திரைகள்: வல்லாரை இலை, துளசி இலை, மிளகு, சீரகம் இந்த மூன்றையும சமமாக எடுத்து, விழுதாக அரைத்து, மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டிக்கொண்டு, நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், சிறுநீர் கட்டுதல், உடல் சூடு, தோலில் ஏற்படும் அரிப்பு இப்படி எந்தவகையான பிரச்சனை வந்தாலும், இந்த வல்லாரை மாத்திரை மருந்தாக பயன்படும்.
உடல் சூட்டினை தணிக்கக்கூடிய சக்தி இந்த வல்லாரைக்கு உள்ளது.. வல்லாரை இலையுடன் சம அளவு வெந்தயத்தை சேர்த்து, சிறிதளவு தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு, கண் எரிச்சல், தலைவலி, உடல் அசதி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, பின் முதுகுவலி, இடுப்பு வலி போன்ற அனைத்துமே தீர்ந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம்.
மனித மூளை: மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் உதவுவது இந்த கீரையாகும்.., தொடர்ந்து வல்லாரையை சாப்பிட்டு வருபவர்களுக்கு மனித மூளை நன்றாக செயல்படும்..
வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, கல் உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் இந்த வல்லாரை சட்னியில் புளியை கொஞ்சம்கூட சேர்க்கக்கூடாது.
மூளை நரம்புகள்: குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
வல்லாரை பவுடரையும் பயன்படுத்தலாம்.. இதற்கு வல்லாரை இலைகளை நிழலில் காயவைத்து, பவுடராக அரைத்து, சலித்து எடுத்து வைத்து கொண்டு, 1 முதல் 2 கிராம் அளவுக்கு எடுத்து, தினமும், காலை, மாலை என 2 வேளையும், ஒரு கிளாஸ் பாலில் கலந்து மாணவர்களுக்கு தரலாம்..
அல்லது வெறுமனே 2 வல்லாரை இலைகள் காலையில் வெறும் வயிற்றிலும் சாப்பிட தரலாம். இதனால், குழந்தைகளின் திறன், நினைவாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பும் பெருகிவிடும் என்கிறார்கள்.
கர்ப்பிணிகள்: இப்படி ஏராளமான பயன்களை தரக்கூடிய இந்த வல்லாரையை, மருந்தாக உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெறுவதே சிறந்த ஆரோக்கியமாகும். ஏனென்றால், வல்லாரையை அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைவலி, தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு.. மூளையில் ஏற்படுகிற வேதிப் பொருட்களை அதிக அளவில் தூண்டிவிடும் என்பதால் வலிப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதில் கர்ப்பிணிகளும் டாக்டர்களின் அனுமதியை பெறாமல் வல்லாரை சாப்பிடக்கூடாது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications