மட்டனுடன் "இதை" சாப்பிடாதீங்க.. ஆட்டுக்கறியில் 'இதை' சேர்க்காதீங்க.. மீன் செய்றீங்களா? இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைச்சி வகைகளுடன் சில வகை உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்... ஏன் தெரியுமா?

எப்போதுமே எதிரெதிர் குணங்களை உடைய உணவு பொருட்களை ஒன்றாக சாப்பிடக்கூடாது.. இதனால் எதிர்விளைவுகள் உண்டாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

Do you know the Super Health Benefits of Mutton and Cant we eat Mutton with Curd what are the Major reasons

குறிப்பாக, பால் பொருட்களுடன் உருளைக்கிழங்கு, பீன்ஸ், இறைச்சி சாப்பிடக்கூடாது. பழங்களை தானியங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பழங்கள், பால், இரண்டையும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, உடல் உப்பசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தேவையில்லாத நச்சுக்கள் வயிற்றில் சேர்ந்துவிடும்.

தயிருடன் கீரைகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், கீரைகளும் செரிமானம் ஆக நேரமாகும்.. இதனுடன் தயிரும் இணையும்போது, கூடுதல் மந்தத் தன்மையை உண்டுபண்ணிவிடும்.

தயிர் + கருவாடு: தயிரையும் கருவாட்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. தயிரையும் மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. உஷ்ணமான சாப்பாடு சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது.. பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது.. இரண்டுமே அதிக சத்துக்களை தருகிறது என்றாலும், ஒன்றாக சாப்பிடும்போது, ஜீரண உறுப்புகளை மந்தமாக்கிவிடும்..

நல்லெண்ணெய்யில் இறைச்சியை சமைக்கக்கூடாது.. முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இறைச்சியுடன் வினிகரை சேர்த்து சமைக்கக்கூடாது.. பாலுடன் சாக்லெட்டை சேர்த்து சாப்பிடக்கூடாது. பீன்ஸுடன் பால், இறைச்சி, முட்டை, மீன், பழங்கள், சேர்த்து சாப்பிடக்கூடாது.

நெஞ்செரிச்சல்: இறைச்சி சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்துக் குடிப்பது வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகளை கொண்டுவந்துவிடும்.. காரணம், பால் + இறைச்சி இரண்டும் புரதத்தின் ஆதாரங்கள்.. அமில ரிஃப்ளக்ஸ்க்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.

ஒவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு ஆற்றல் உள்ளதாம்.. எந்தவகை உணவாக இருந்தாலும், அவைகள் ஜீரணிக்க வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட செரிமான சூழல் தேவைப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.

பால் மட்டன்: பால் குடித்த பிறகு மீன், கோழி அல்லது ஆட்டிறைச்சி சாப்பிட்டால், 2 வகையான புரோட்டீன்கள் ஒரே நேரத்தில் உடலுக்குள் செல்கிறது. செரிமானம் ஆவதற்கு நேரமாகும்.. அத்துடன், ஜீரணிக்க உடலை கடினமாக்கிவிடும்.. நோயெதிர்ப்பு அமைப்புகளையும் மோசமாக பாதித்துவிடும்.

மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது.. இரண்டிலுமே புரோட்டீன் உள்ளதுடன், லாக்டோஸ் சகிப்புத்தன்மை உணவு விஷத்திற்கு வழிவகுத்துவிடுமாம்.. உடலில் வெப்பத்தை உருவாக்கி, இறுதியில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+