பனங்கிழங்கில் பலன்..கருப்பை கட்டி கரைய சூப்பர் உணவு.. இந்த பழம் சாப்பிட்டால், "குட் நியூஸ்" வருமாமே
சென்னை: மனித குலத்தின் ஆரோக்கியம் மொத்தமும் இயற்கையில் கொட்டிக்கிடக்கின்றன.. முறையான உணவுப்பழக்கம் இருந்தாலே, ஆயுள்கூடிவிடுமாம். அதேபோல, உணவுமுறை மூலமே, குழந்தைப்பேறு பிரச்சனையை நம்முடைய முன்னோர்கள் தீர்த்து வந்துள்ளனர். அதில் ஒருசில உணவுகளை பார்ப்போம்.
முதலில் பனங்கிழங்கை எடுத்துக் கொண்டால், நார்ச்சத்து நிறைந்தது.. வைட்டமின் B, C நிறைந்த, பாதாமுக்கு இணையான சத்துக்களை கொண்ட கிழங்கு இதுவாகும்..

கருப்பை கோளாறுகளை நீக்க, பனங்கிழங்குகள் பெரிதும் உதவுகின்றன. இந்த கிழங்கை வேகவைத்து, தூளாக்கி அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப்பை பலம்பெறும் என்பார்கள்.. அல்லது இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், பெண்களின் கர்ப்பப்பை உட்பட உடல் உறுப்புகள் பலம் அடையுமாம்.
மூலக்கூறுகள்: அதேபோல, பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இந்த கிழங்கிலிருந்து தயாமின் என்ற ஒரு மூலக்கூறு தான், வயாக்ராவில் சேர்க்கப்படுகிறதாம். ஆணுறுப்பின் எழுச்சி அதிக நேர இருப்பதற்கும், அல்லது எழுச்சி இல்லாமல் இருக்கும் ஆணுறுப்பை தற்காலிகமாக எழுச்சி பெற வைப்பதற்கும், நீண்ட நேரம் விந்து வெளியேறாமல் இருக்கவும் இந்த "தயாமின்" உதவுகிறது. எனவேதான், நாட்டு மருத்துவத்திலும் பனங்கிழங்குக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது என்பதால்தான், இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பனங்கிழங்கு ஏற்றுமதி அதிகம் நடக்கிறது..
சூரணம்: பனங்கிழங்கில் சூரணம் தயாரித்து சாப்பிடலாம். இந்த கிழங்கை பாலில் வேக வைத்து எடுத்து, வெயிலில் காயவைத்து, பவுடராக அரைத்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும்.. இந்த பவுடரில் தினமும் 2 வேளை, பாலுடன் சேர்த்து 48 நாட்கள் செய்தாலே, ஆண்களுக்கு நல்லதாம். எனினும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இப்படி சூரணமாக, எடுத்து கொள்ளும்போது ஆரோக்கியம் தழைக்கும்.
அதேபோல, மீன் எண்ணெய் மாத்திரைகளும் பாலியல் குறைபாடுகளை தீர்க்கிறதாம். மீன் எண்ணெய்யை தினமும் சாப்பிடுவதால், ஆண்மை அதிகரித்து குழந்தைபேறு பெறும் வாய்ப்பையும் அதிகரிக்க செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பழச்சாறு: கல்யாண முருங்கை இலைகளையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம். ஆண்மையை பெருக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு.. இந்த இலையை நாலைந்து எடுத்து, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து, மாதுளம் ஜூஸில், கசகசா தூளை சேர்த்து 21 நாட்கள் குடித்தால் ஆண்மை பெருகும் என்பார்கள்..
அதேபோல, இதன் இலை சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறைகள் நீங்குமாம்.. கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும் என்கிறார்கள்.. கருமுட்டையும் அதிக அளவில் உற்பத்தியாகும் என்கிறார்கள்.
கருப்பை நீர்க்கட்டி: அதேபோல, குழந்தை இல்லையே என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது சப்பாத்தி கள்ளி பழங்களாகும்... காரணம், பிசிஓடி என்ற கருப்பை நீர்க்கட்டிகள், கருமுட்டையை பலமில்லாமல் போகச்செய்து, குழந்தை பேற்றில் சிக்கலை உண்டாக்கிவிடும்.. சிலசமயம் கருச்சிதைவையும் உண்டுபண்ணிவிடும். இந்த சினைநீர்க்கட்டிகளை கரைப்பதற்கு உதவுவதுதான் இந்த சப்பாத்தி கள்ளிபழம்..
வாரம் 3 முறை சாப்பிட்டுவந்தால், கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் அழிந்து விடும். அத்துடன், கரு முட்டை வளர்ச்சியும் சீராகும். அதுவும் கர்ப்ப காலத்தில், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், குழந்தை சிவப்பமாக பிறக்கும் என்பார்கள். அதாவது, குங்குமப்பூவை விட, இந்த இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்ததாம்.
குழந்தைப்பேறு: ஆண்களுக்கும் இந்த சப்பாத்தி கள்ளி தரும் நன்மைகள் ஏராளம்.. விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால், இந்த பழம் நிச்சயம் உதவும் என்கிறார்கள்.. குழந்தை பேறுக்காக இந்த பழத்தை சாப்பிடுபவர்கள், டீ, காபி சாப்பிடக்கூடாது என்பார்கள்.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற்றே இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications