சர்க்கரை நோயாளிக்கு நாவல் கொட்டை தூள்.. 1 ஸ்பூன் போதுமே.. நீரிழிவு கட்டுக்குள் வரும்.. ட்ரை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாவல் கொட்டைகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவே கூடாது என்று சொல்ல என்ன காரணம் தெரியுமா? எந்தெந்த வகைகளில் நாவல் கொட்டையை பயன்படுத்தலாம்?

வாழை, தென்னை, முருங்கை போலவே, நாவல் மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. நாவல் பழங்கள், நாவல் விதைகள், நாவல் பட்டைகள், நாவல் இலைகள் என ஒவ்வொன்றிலும், அரியவகையான மருத்துவம் ஒளிந்திருக்கிறது. அதனால்தான், இன்றுவரை நாவல் மரத்துக்கான பயன்பாடும், தேவையும் அதிகரித்தபடியே இருக்கின்றன.. மருத்துவத்திலும் நாவல்கள் தவிர்க்க முடியாத மருந்தாக உள்ளன.

Jamun Seeds jamun seeds powder diabetics

பழங்கள்: நாவல் பழத்தில், வைட்டமின்C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், புரோட்டீன், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உள்ளன.. இதயத்துக்கு நண்பன் இந்த நாவல் என்று சொல்லலாம்..

நல்ல நினைவுத்திறனை தரக்கூடியது நாவல் பழங்கள்.. ரத்த உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது... குறைவான கலோரி கொண்டதுடன், கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி நாவல் பழத்துக்கு உள்ளது என்பதால் உடல் எடை குறைகிறது
சிவப்பணுக்கள்: நாவல் கொட்டைகளில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் C நிறைந்துள்ளது. உடலிலுள்ள ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு துணை இதிலுள்ள இரும்புச்சத்து புரிகிறது.

நாவல் பழ இலைகள், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது.. நாவல் கொட்டைகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கின்றன இந்த கொட்டைகள்.
நாவல் கொட்டையை பவுடர் செய்து சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை குறைகிறதாம்.

சர்க்கரை ஆய்வு: இது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது, நாவல் கொட்டை பவுடரை, சாப்பிட்டு வருபவர்களை டெஸ்ட் செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்ததாம்.

எனவே, இந்த கொட்டையை பதப்படுத்தி, பவுடர் செய்து சாப்பிடலாம்.. இதை வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம்.. இந்த பழத்தின் கொட்டைகளை ஒரு வாரம் உலரவிட வேண்டும். பின்னர் அதை இரண்டாக உடைத்து வெயிலில் காயவிட வேண்டும். அதாவது, இந்த கொட்டைக்குள் காணப்படும், பச்சை நிறமும் முற்றிலும் காய்ந்துவிட வேண்டும்.

ரத்த சுத்திகரிப்பு: அதற்கு பிறகே மிக்ஸியில் தூள் செய்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும். இதில், தினமும் 2 வேளை, 1 டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.. இதனால், ரத்தமும் சுத்தமாகும்.. சிறுநீரில் தொற்றுக்கள், நச்சுக்கள் இருந்தாலும் வெளியேறிவிடும்.. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சிறுநீர் வெளியேறும் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த பவுடர் நிவாரணத்தை தரும்.

அதேபோல, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், இந்த நாவல் கொட்டை பொடியுடன், வெந்தயப் பொடி, கடுக்காய் தோல் போன்றவற்றை சமபாகம் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் இதை ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து காலையில் கால் டம்ளர் குடித்தாலும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

சபாஷ்: சில மாத்திரைகளால் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்குகூட, இந்த நாவல் கொட்டை பொடி கைகொடுத்து உதவுகிறது. எனவே, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று நாவல் கொட்டை பவுடரை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதே முறையான ஆரோக்கியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+