இட்லி, தோசை மாவு புளித்து விட்டால் தூக்கி கொட்டிடாதீங்க! எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க!
சென்னை: இட்லி மாவோ தோசை மாவோ புளித்துவிட்டதா? அப்படியென்றால் அதை தூக்கி எறியாதீர்கள். அதை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். எந்த உணவு பொருளையும் அது கெட்டு போகாதவரை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.
வாராவாரம் எல்லோர் வீட்டிலும் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பார்கள். பொதுவாக வார நாட்களில் இட்லி, தோசைதான் பெரும்பாலானோர் வீட்டில் சிற்றுண்டியாக உள்ளது.

இட்லி, தோசை ஆகிய இரண்டுமே லேசான உணவுகள் என்பதால் பெரும்பாலானோருக்கு இது செட் ஆகிறது. இட்லியை ஆவியில் வைப்பதால் இது உடலுக்கு நன்மையை தருகிறது. குழந்தைகள், காய்ச்சல் வந்தவர்கள், ஜீரண கோளாறு இருப்போர் தோசையை காட்டிலும் இட்லியை சாப்பிடலாம்.
அப்படி வாரந்தோறும் இட்லி மாவு அரைத்து என்னதான் பிரிட்ஜில் வைத்தாலும் அது சில நாட்கள் கழித்து புளித்த வாடை அடிக்கிறது. இதனால் பலர் அதில் வெங்காயத்தை வதக்கி போட்டு ஆனியன் தோசை செய்வார்கள். இன்னும் சிலர் வெங்காயம், கேரட் துருவல், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, அரிசிமாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவார்கள்.
எண்ணெய்யில் பொரித்த பதார்த்தங்களை அதிகம் விரும்பாதோர் மாவு புளித்துவிட்டால் அதை கீழே கொட்டி விடுகிறார்கள். அப்படி செய்யக் கூடாது. உணவை எந்த காலத்திலும் வீணடிக்கவே கூடாது. அந்த புளித்த மாவை வைத்து என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஒன்று புளித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செடிகளுக்கு கரைத்து ஊற்றிவிடலாம். இல்லாவிட்டால் மாடு இருக்கும் பகுதிகளில் இருந்தால் மாட்டுக்கு அந்த மாவை கொடுத்துவிட்டால், அவர்கள் கழிநீர் தண்ணீரில் கலந்து கொடுப்பார்கள். இதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு கிளீனிங் பர்போஸ்!
மாவில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபேகாலிஸ், லாக்டோபேசிலஸ் பெர்மென்டம் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் இருப்பதால்தான் அந்த மாவில் நொதித்தல் நடந்து புளித்துவிடுகிறது. இந்த புளித்த மாவில் அமில தன்மையும் அதிகமாக இருக்கும். எனவே எண்ணெய் பிசுக்குள்ள எண்ணெய் பாத்திரங்கள், டைல்ஸ்கள், கிச்சன் மேடைகள், உள்ளிட்டவைகளை சுத்தப்படுத்தலாம்.
அது போல் ஸ்டீல் குழாய்களில் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்கலாம். மேலும் பாத்ரூம்களில் தரையை சுத்தப்படுத்தலாம். எண்ணெய் பிசுக்குள்ள அடுப்பு, ஸ்டீல் சிங்க் உள்ளிட்டவைகளை கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம், அது போல் பாத்திரம் கழுவதற்கும் சிலர் இதை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த மாவை முகத்திற்கு பேஸ் ஸ்க்ரப் போல் தேய்த்துவிட்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவடையும். எனவே இனி புளித்த மாவை வேஸ்ட் செய்யாதீர்கள்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications