தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா? இதை பாலோ பண்ணி பாருங்க.. எக்ஸ்பர்ட்ஸ் சொல்லும் டிப்ஸ்
சென்னை: தூங்கும் முன் தண்ணீர் குடிக்கலமா? தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கலாமா? என பல சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகிறது. இதில் எந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று பிரபல ஆயுர் வேத நிபுணரான மருத்துவர் டிம்பிள் ஜன்க்டா விளக்கியுள்ளார். இது பற்றி இங்கு பார்ப்போம்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு.. இந்த உலகத்தில் உயிர்கள் வாழ நீரும் இன்றியமையாது. மனிதனும் உயிர் வாழ அடிப்படையான தேவைகளில் ஒன்று நீர். ஒருநாளைக்கு சராசரியாக 3 முதல் 4 லிட்டர் வரை குடிக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உணவு உண்ணாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். ஆனால் தண்ணீர் இன்றி வாழ முடியாது. நீர்ச்சத்துடன் இருக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பள்ளிக்கூட காலங்களிலேயே நாம் அறிந்து இருப்போம். உடலுக்கு நீர்ச்சத்து அவசியம் என்றாலும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது அவ்வளவு நல்லது அல்ல என்றும் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அந்த வகையில், பிரபல ஆயுர் வேத நிபுணரான மருத்துவர் டிம்பிள் ஜன்க்டா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் சில முக்கிய டிப்ஸ்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது, தண்ணீர் குடிக்க எது சரியான தருணம் என்பது பற்றிய சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக தண்ணீர் குடிக்கும் போது பலருக்கும் நாம் எந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடல் நலனுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற சந்தேகம் எழும். அதாவது, தூங்கும் முன் தண்ணீர் குடிக்கலமா? தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கலாமா? என பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இது குறித்தே டிம்பிள் ஜன்க்டா தனது சமூக வலைத்தளத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
காலையில் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும்:
ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்ததும் முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இரவு நீண்ட நேரம் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்போம். அப்போது செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் பிற உடல் செயல்பாடுகள் மெதுவாக இருக்கும். எனவே, அன்றைய நாளை தண்ணீருடன் துவங்க வேண்டும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது ஒரு டீஸ்பூன் நெய் கலந்து குடிக்கலாம். ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூளையும் சேர்த்து குடிக்கலாம். இப்படி குடிப்பதன் மூலம் ஆண்டி ஆன்டி ஆக்ஸிடன்ட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை உடலில் அதிகரிக்க உதவும்.
சாப்பிடும் முன் தண்ணீர்:
உணவு சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது நம் குடலை சுத்தப்படுத்த உதவும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கவும் இது உதவும். 12 வாரங்களுக்கு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அரை லிட்டர் தண்ணீர் குடித்தவர்களுக்கு உடல் எடை 3 பவுண்டுகள் குறைந்ததை ஆய்வு உறுதி செய்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தூங்கும் முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும்:
தூங்கும் முன்பாக தண்ணீர் குடிப்பது உடல் நலனை மேம்படுத்த உதவுமாம். இரவு முழுவதும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இது உதவும் என்கிறார் மருத்துவ நிபுணர். அதேபோல், உடலில் தேவையற்ற நச்சுகள் வெளியேறும். வயிற்றில் உள்ள வலி, பிடிப்பு போன்றவையிலும் இருந்து விடுபடவும் இரவில் தண்ணீர் குடிப்பது உதவுமாம்.
குளிப்பதற்கு முன்பாக தண்ணீர் குடித்தல்:
குளிப்பதற்கு முன்பாக தண்ணீர் குடிப்பது நமது உடலில் ரத்த அழுத்தத்தின் அளவை குறைக்க உதவுமாம். நமது உடலுக்கு உள்ளே தேவையான அளவு வெப்ப நிலையை சமப்படுத்தவும் தண்ணீர் அருந்துவது உதவும் என்கிறார். தண்ணீர் குடிப்பது என்பது வாழும் பகுதிகள், புற வெப்ப நிலை போன்றவை அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே மாறுபடு இருக்கும் எனவும் மேற்கூறியவை பொதுவான அறிவுரையே என்றும் மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications