இரவு நேரத்தில் மட்டும் இரு கால்களும் வலிப்பது ஏன் தெரியுமா?
சென்னை: இரவு நேரத்தில் மட்டும் இரு கால்களும் வலிப்பது எதனால் தெரியுமா? ஒரு நாள் வலித்தால் பரவாயில்லை, தினமும் வலிக்கிறது என்றால் என்ன என்பதை பார்க்க வேண்டும்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் டாக்டர் திவ்யா அருள் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இரவில் மட்டும் இரு கால்களும் வலிப்பது எதனால்? பகலில் வேலைப் பளு உங்களது மனதை ஆக்ரமித்து கொள்வதால் தசைகளில் உள்ள வலியை உங்களால் உணர முடியாதது இயல்பான விஷயம்.

என்றாவது கடினமான வேலைப்பளு உள்ள நாட்களில் இவ்வாறு நடப்பது பிரச்சினை இல்லை. ஆனால் தொடர்ந்து எல்லா இரவுகளிலும் கால் வலி தாங்க முடியாமல் போவது.. கெண்டைக்காலில் தசைப்பிடிப்பு ஏற்படுவது.. மதமதப்புடன் காணப்படுவது..பாதங்களில் எரிச்சல் உண்டாவது இருக்குமாயின்.. உங்கள் நீரிழிவு கட்டுக்குள் இல்லை என்று பொருள்.. அதனால் பாதத்தில் அதிக வலியும் ஏற்படுவதுண்டு.. இதன் பெயர் DIABETIC MUSCLE PAIN என்றழைப்பார்கள்.
நீரிழிவை கட்டுக்குள் வைக்கவில்லை எனில் கால்கள் மிகவும் மெலிந்து போய் காணப்படும்.. அவ்விடம் உள்ள தசைகள் எல்லாம் தேய்ந்து இருக்கும். இவை நாளடைவில் கால்கள் வலுவிழந்து போனது போன்ற பிரச்சினை தருகிறது. MUSCLE WASTING என்று பெயர்.
குறைந்த மாவுச்சத்து உணவு முறையை எடுத்து கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அப்போது தான் திடம் இழந்து போன தசைகளை சரியாக்க முடியும்..
மேலும் கால்களுக்கு.. செருப்பை தவிர்த்து நல்ல ஷூ வாங்கி சாக்ஸ் உடன் அணிவதும் அவசியம். அதுவும் இந்த மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் கால்களை விரைவில் சோர்வடையச் செய்து விடும். பாதகங்கள் பாதுகாப்பாக இருக்கும் போது தான் சீராக நடைபயிற்சி மேற்கொள்ள முடியும்.
அதுவே உங்கள் நீரிழிவை கட்டுக்குள் வைப்பதற்கு முக்கிய வழியாகவும் உள்ளது.. புரத சத்து உணவும்..சீரான நடைபயிற்சியும் தேய்ந்து போன கால் தசைகளை செம்மைப்படுத்தி கால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாக உதவும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications