சாப்பிட்ட பிறகு தூக்கம் ஏன் வருது தெரியுமா? சுவாரசிய தகவல்கள்
சென்னை: நாம் உணவு உண்பதற்கு முன் இருக்கும் சுறுசுறுப்பு, உண்டபின், இருப்பதில்லை. வயிறு நிரம்பியவுடன் உடல் எடை கூடினதுபோலும், உண்ட மயக்கம், குட்டி தூக்கம் வருவது இயல்பானதே. உணவை சாப்பிடுவதற்கு முன்பு இயக்கமில்லாமல் இருக்கும் இரைப்பையில் (Stomach), இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும், ஆனால் உணவு உண்டபின்பு, அதனை செரிக்க செய்திட, அதிக இரத்தம் ஓட்டம் நரம்புகளின் வழியே சென்று தனது வேலையை இயக்குகிறது.

உணவும் தூக்கமும்
நாம் ஆரோக்கியத்துடன் மற்றும் நீண்ட நாள் உயிர் வாழ, அதற்கு உணவு இன்றியமையாததாகும். சாப்பிட உணவை நம்முடைய உடம்பிற்கு பலவகையில் பயன்படுத்திட இரைப்பை செயல்பட முயற்சிக்கும் வேலையில், அதன் செயல்பாட்டிற்கு இடையூறு நேராதபடி மூளை தூக்கத்திற்கு செல்கிறது. இரைப்பையில்
உள்ள உணவை செரிக்க செய்யும்போது, மூளை தன்னுடைய அதிக சுறுசுறுப்பான வேலைகளிலிருந்து சற்று வேகத்தை குறைத்து, அறிதல், ஏவுதல், என பல செயல்களை செய்யாமல், அமைதியாகி உறக்க நிலைக்கு சென்றுவிடுகிறது. மூளையிலுள்ள அதிகப்படியான இரத்தம், இரைப்பை இயங்குவதற்கு செல்லும், அதே சமயத்தில் மூளைக்கு வேலை கொடுத்தால், அது பழுதாகிவிடும். எனவே தான், இரைப்பை இயங்கும்போது, மூளை உறக்க நிலைக்கு செல்கிறது.
சாப்பிட்ட பிறகு எதனால் உறக்கம்
சாதாரணமாக நாம் விழித்திருக்கும்போது, மூளை ஓயாமல் இயங்கி, உடலில் உள்ள மற்ற எல்லா உறுப்புகளையும் அதின் அதின் வேலைகளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. அப்போது உடலிலுள்ள இரத்தம் மூளைக்கு அதிகமாக பாயும். ஆனால் நாம் சாப்பிட பிறகு, இரைப்பை வேகமாக செயல்பட மூளையில் ஓடும் இரத்தத்தின் பெரும்பகுதி இரைப்பையின் நரம்புகளின் அதிகம் செல்வதால், மூளை இரத்தம் குறைந்து உறக்கத்தில் செல்கிறது. இதனால் தான், சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதற்கான முக்கிய காரணமாய் இருக்கிறது.
தூக்கம் வருவதற்கு மற்றொரு காரணம்
தூக்கம் வருவதற்கு மற்றொரு காரணம், எந்த ஒரு வேலையை செய்வதற்கும், நரம்பு கட்டுகளின் இயக்கத்திற்கு, இரத்த ஓட்டம் அவசியமாகும். இந்த நரம்பு கட்டுகள் நன்கு செயல்படுவதற்கு உடலில் உள்ள சக்கரையை உணவாக கொண்டு, அதனை எரித்து விடுகின்றது. இதனால் சக்கரையின் அளவு குறையும்போது உடல்தளர்ச்சி அடைந்து, ஆழ்ந்து மூச்சு விடுவது, மீண்டும் எந்த ஒரு வேலையை செய்ய முடியாத அளவிற்கு சோர்வு ஏற்பட்டு, தூக்கம் வருகின்றது.

தூக்க குறைவால் ஏற்படும் விளைவுகள்
சாதாரணமாக ஓர் நாளைக்கு குறைந்தது 7-8 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் அவசியமாகும். ஒரு இரவு தூக்கம் குறைந்தாலும், உடலில் உள்ள சதையில் சுமார் 1/2 கிலோ அளவிற்கு குறைந்து போகும் என்று சில ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அறிவு ஆற்றலும் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் மூளை உழைப்பு உள்ளவர்கள் தூக்கம் குறைந்தால், அவர்களின் உடல் வலிமை மிகவும் குறைந்து போகும். எனவே, அளவுக்கு குறையாமல், தேவையான உறக்கம் இருந்தால் வாழ்நாளும் நீடிக்கும். ஒரு சிலருக்கு 6- 8 மணி நீண்ட நேரம் தூங்கிய பின்னும், உடலில் சோர்வு இருந்தால், அது அவர்களின் உடலில் கோளாறு உள்ளது என்பதே உண்மையாகும். நல்ல தூக்கம் என்பது நீண்ட நேரம் தூங்குவது அல்ல, எவ்வளவு ஆழ்ந்த உறங்கியது என்பதே ஆகும்.
நன்றாக ஆழ்ந்து தூங்குவதற்கு
தினமும் ஆழ்ந்து தூங்குவதற்கு, படுக்கை அறையும் செம்மையாக அமைத்திட வேண்டும். படுக்கை அறையில் அதிக ஒளி அல்லது சுவர்களின் நிறம் பளிச்சென்று இருந்தால், அவ்வொளி உடலில் பாய்ந்து இரத்த அழுத்தத்தை அதிகரித்து, உடலுக்கு கெடுதியை தரும். எனவே ஒளியில்லாத படுக்கை அறையில் தூங்குவது நல்லது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications