நாவல் பழங்கள்.. நம்மிடமே இருக்கு மருந்து.. தினந்தோறும் 1 பழம்.. அதுவும் மஞ்சள் நிற பழத்தை விடாதீங்க!
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தினமும் பழங்களை சாப்பிடுவது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்கள் உணவு நிபுணர்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
பழங்களை தினமும் உணவில் எடுத்து கொள்வதன் அவசியம் என்ன தெரியுமா? பழங்களில் ஏராளமான நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. குறிப்பாக உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் தேவையானதாக இருக்கின்றன.

இதே சத்துக்கள், அரிசி உணவுகளிலோ அல்லது வறுக்கப்பட்ட, பொறிக்கப்பட்ட உணவுகளிலோ கிடையாது.. பழங்களை தினமும் சாப்பிட சொல்வதற்கு பிரதான காரணம் இதுதான். அதேபோல, வைட்டமின் A, B, C, E, K சத்துக்கள் உள்ளதால், உடலுறுப்புகளுக்கு பழங்கள் பெருத்த நன்மைகளை தருகின்றன.. அந்தவகையில், குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை உள்ளுறுப்புகளுக்கு பலம் தந்து அவர்களை காக்கிறது இந்த பழங்கள்.
மாவுச்சத்து: அதுமட்டுமல்ல, உடல் எடை அதிகரிக்க பிரதான காரணமே கெட்ட கொலஸ்ட்ரால்கள்தான்.. அதேபோல மாவுச்சத்துக்களும் உடலில் அதிகமாகிவிட்டால், உடல் எடை மேலும் கூடிவிடும்.. ஆனால், இந்த பழங்கள் அப்படியில்லை.. இவைகளில் கொலஸ்ட்ராலும் இல்லை, மாவுச்சத்தும் இல்லை என்பதால் தைரியமாக சாப்பிடலாம்.
அந்தவகையில் தினம் ஒரு பழங்களை சாப்பிடுவதால், என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் தெரியுமா? பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, அதிலிருக்கும் ஃப்ளாவனாய்ட்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கின்றன..
முக்கியமாக, மனித மூளையின் செயல்திறன் அதிகமாகும்.. சரும சுருக்கம் தள்ளிப்போடப்பட்டு, மினுமினுப்புகள் அதிகமாகும்.. கொலாஜன் உற்பத்தியும் அதிகமாகிறது.. இதனால், சருமம் மட்டுமல்லாமல் தலைமுடியும் உறுதியாகிறது.
ஜீரணம்: ஜீரணம் எளிதாகும்.. ரத்த விருத்தி பெருகும். ரத்த சுத்திகரிப்பு நடக்கும்.. நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த பழங்களையே 2 விதமாக பிரிக்கிறார்கள்.. குறிப்பாக, மஞ்சள் நிற பழங்களில் கால்சியம், வைட்டமின் C, B, A, போலிக் அமிலம் அடங்கியிருக்கின்றன.. இது எலும்புகள், பற்களை வலுப்படுத்துகிறது. சிறுநீரக கோளாறுகளையும் நீக்கும் தன்மை மஞ்சள் நிற பழங்களுக்கு உண்டு.
சிவப்பு நிற பழங்களை பொறுத்தவரை, வைட்டமின் A சத்துக்கள் அதிகமாக உள்ளன.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க இந்த பழங்கள் உதவுகின்றன.. வைட்டமின் A நிறைந்துள்ளதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தீர்க்கின்றன.. ரத்த அழுத்தம் முதல் பருமன், புற்றுநோய் ஆபத்துக்கள் வரை தடுத்து நிறுத்தும் சக்தி இந்த பழங்களுக்கு உள்ளது.
கொய்யாப்பழம்: சர்க்கரை நோயாளிகள் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதில்லை.. 4, 5 பழங்களை இவர்கள் சாப்பிடலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதில் முக்கியமானது கொய்யாப்பழம்.. இதில் வைட்டமின் A அதிகமும், கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும், சர்க்கரை சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கின்றன.
அடுத்ததாக நாவல் பழத்தை சொல்லலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பழம் இதுவாகும்.. நாவல் வேர்களை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால், சர்க்கரை கட்டுக்குள்ளேயே இருக்கும். இதைத்தவிர, அன்னாசி, ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, பப்பாளி, சிட்ரஸ் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை ஓரளவு சாப்பிடலாம்..
நெல்லிக்காய்: காலையில் வெறும் வயிற்றில் ஒரு முழு நெல்லிக்காயுடன் அதைவிட 2 மடங்கு அதிகமாக உள்ள பாகற்காய் சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.. இதனால், இன்சுலின் தாராளமாகவே சுரக்கும். அதேபோல, பழுக்காத பச்சை நிறம் கொண்ட, சிறிய அளவிலான வாழைப்பழத்தை சாப்பிடலாம். எனினும், சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களின் உதவியுடன், மேற்கண்ட பழங்களை "அளவுடன்" எடுத்து கொள்வதே சிறந்தது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications