மாத்திரை அட்டையில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்குமே! அது ஏன் தெரியுமா? XRx என்றால் என்ன?
சென்னை: மாத்திரை அட்டையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்குமே அதன் அர்த்தம் என்ன என தெரியுமா? அது போல் மருத்துவரின் மருந்துச் சீட்டில் இருக்கும் NRx, XRx என்றால் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் ராஜபதி என்பவர் கூறியிருப்பதாவது: இந்த சிவப்பு நிறக் கோட்டுக்கான விளக்கம் அனைவரும் அறிந்ததே என்றாலும் எனது பங்கிற்கு எனக்கு தெரிந்த மேலும் சில தகவல்களை இங்கு பதிவிட விரும்புகிறேன்....

மாத்திரை மருந்து கடைகளின் மருந்து அட்டைகளிலும், டப்பாக்களிலும் பெறும்பாலும் சிவப்பு நிறக்கோடு போடப்பட்டு இருக்கும்..இந்த சிவப்பு நிற கோடானது மருந்து அட்டைகளில் இடது புறமாக ஒரு ஓரத்தில் போட்டு இருப்பார்கள். இது எதற்காக போடப்பட்டுள்ளது என்றால் மருத்துவர் பறிந்துரை (prescription) இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்வது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக அச்சிடப்பட்ட கோடுதான் அது.
அதாவது மருத்துவர் எழுதி கொடுத்த பரிந்துரை சீட்டை (Prescription) மருந்தகத்தாரிடம் கொடுத்தால் மட்டுமே அந்த மருந்து மாத்திரையை அவர்கள் நமக்கு கொடுப்பார்கள்....இதுவே சாதாரண அனாசின், பாராசிட்டாமல் போன்ற சில மாத்திரைகளில் இந்த சிகப்பு கோடு இருக்காது என்பதாலே நம்மால் அந்த மாத்திரிகளை மருந்தகங்களில் எளிதில் கேட்டு பெறமுடிகிறது.
ஆதாலால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த சிவப்பு கோடிட்ட மாத்திரைகளை வாங்குவதோ, விற்பதோ சட்ட விரோதமானது.....
சரி இந்த சிவப்பு கோட்டை தாண்டி சில குறியீடுகள் மருந்து மாத்திரை அட்டைகளில் இருப்பதை சற்று கூர்ந்து கவனித்தால் நம்மால் காண முடியும். அந்த குறியீடுகள் அனைத்தும் மருத்துவரின் பரிந்துரை நிலையையே குறிக்கிறது.... அதில் முக்கியமான சில பின்வருமாறு.
மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள Rx குறியீடானது எதற்காக மருந்து மாத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் நாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறோம், மருத்துவர் நமக்கு மருந்து மாத்திரைகளை எழுதிதருவார்.
அவ்வாறு எழுதிதந்த மருந்து சீட்டை மருந்தகத்தில் காட்டினால் மட்டுமே இந்த Rx மருந்துகள் குடுக்கப்படும். முக்கியமாக அந்த மருந்தை நாம் எடுத்துக் கொண்டு உடல்நிலை சரியாகிவிட்டு மீண்டும் சில மாதங்கள் கழித்து அதே போன்று உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரிடம் செல்லாமல், ஏற்கனவே அம்மருத்துவர் எழுதி கொடுத்த அந்த Rx மாத்திரை, மருந்துகளை நாம் மீண்டும் மீண்டும் மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம் என்பதே இந்த Rx குறியீடானது நமக்கு உணர்த்துகிறது.
இப்ப NRx பற்றி பார்ப்போம்.. பொதுவாக NRx என்பதை New Prescription என்று சொல்வார்கள். இந்த NRx வகை மருந்துகள் சிறிதளவு நம்மை கிளர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் இந்த மருந்து (Drugs) இருக்கக்கூடும் . இந்த மருந்துகளை Narcotic Drugs என்று குறிப்பிடுவார்கள். இந்த NRx மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நமக்கு தர மாட்டார்கள்... குறிப்பாக மருத்துவர் பரிந்துரை சீட்டானது (prescription) 6 மாதம் வரைதான் செல்லுபடியாகும்....பின்பு அந்து மருந்து சீட்டானது காலாவதி ஆகிவிடும்.
அதாவது 6 மாதம் கழித்து மருத்துவர் எழுதிக் குடுத்த NRx வகை மருந்துகள் நம்மால் மருந்தகங்களில் பெற முடியாது. பொதுவாக NRx வகை மருந்துகளை "மனஅழுத்தம், உளவியல், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இந்த மருந்துகளை H, H1 என்று மருந்தகங்களில் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.
இந்த XRx வகை மருந்துகள் பொதுவாக அதிக அளவு கிளர்ச்சி ஊட்டக் கூடிய போதை வகை மருந்து என குறிப்பிடுவர். இவ்வகை மருந்துகளை Narcotic and psychotropic substance based drugs என்று அழைப்பர். இந்த மருந்துகள் அனைத்தும் X என்ற எழுத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.... இந்த மருந்துகள் எல்லாம் அதிக பலம் வாய்ந்த வலி நிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுகிறது.
பொதுவாக இந்த XRx மருந்துகள் புற்றுநோயாளிகள், மனநோயாளிகள் மற்றும் பெரும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளை எல்லா மருத்துவர்களும் பரிந்துரை செய்ய மாட்டார்கள். குறிப்பாக மனநல டாக்டர், மயக்கவியல் நிபுணர், புற்றுநோய் மருத்துவர்கள்தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள்.
இந்த XRx வகை மருந்து சீட்டை பரிந்துரைக்கப்பட்ட அந்த நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் மருந்தகத்தார்கள் நோயாளிகளின் தகவல்களுடன் இந்த மருந்து சீட்டை 2 வருடம் பாதுகாத்து வைத்திருத்தல் அவசியமாகும்.
NRx மற்றும் XRx மருந்துகளுக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடு எனில் இந்த மருந்துகளை சிலர் போதையூக்கியாக தவறான முறையில் பயன்படுத்துகின்றனர் என்பதாலே..மேலும் மருத்துவர்கள் இந்த வகை Drugs மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரேடியாக நிறுத்தமாட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துதான் நிறுத்துவார்கள்..அவ்வாறாக இந்த Drugsகளை ஒரே அடியாக நிறுத்தினால் நோயாளிகளுக்கு பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications