தூங்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? இந்த பழக்கம் நல்லதல்ல..நிபுணர்கள் அட்வைஸ்
சென்னை: உங்களுக்கு தூங்கும் போது கால் ஆட்டும் பழக்கம் இருக்கிறதா? அது ஏன் தெரியுமா?
தொடர்ச்சியாக தூங்காமல் இருப்பவர்கள் அல்லது குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாகவே கால் ஆட்டுவதை பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பழக்கங்கள் இருக்கும்.
சின்ன வயது முதல் அதை பழக்கப்படுத்திக் கொண்டிருப்பார்கள். சில பழக்கங்கள் நல்ல பழக்கம் என்றால் தொடர்வார்கள். சிலர் கெட்ட பழக்கம் என்றால் விட்டுவிடுவார்கள்.

இன்னும் சிலர் கெட்ட பழக்கமாக இருந்தாலும் அதை விட மாட்டார்கள். சிலர் தங்களது முடியை பிடித்துக் கொண்டே தூங்குவார்கள். இன்னும் சிலர் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே தூங்குவார்கள். சிலர் உட்கார்ந்துக் கொண்டே கால் ஆட்டும் பழக்கம் கொண்டவர்கள். இதையெல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் போது ஒரு பெரிய விஷயமே இல்லை.
ஆனால் உடல் ரீதியாக பார்க்கும் போது அது சில உடல் கோளாறுகளை ஏற்படுத்தவும் சுட்டிக் காட்டவும் செய்கிறது. அதை கவனித்து நிவர்த்தி செய்ய வேண்டியது ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடும். ஒரு சிலர் தங்களுடைய நண்பர்களுடன் நேரில் பேசும் போதும் சரி போனில் பேசும் போது சரி கால்களை அசைத்துக் கொண்டே இருப்பார்கள்.
பெரியவர்கள் நீங்கள் கால்களை ஆட்டும் போது பார்த்தால் அப்படி செய்யாதே இதே பழக்கம்தான் நாளை எங்கு போனாலும் ஏற்படும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். அதனால் இந்த பழக்கத்தை விடு என்பார்கள். இன்னும் பெண் பிள்ளைகளாக இருந்தால், நாளை மாமியார் வீட்டுக்கு போனாலும் இந்த பழக்கம்தான் ஏற்படும். அவர்கள் எங்கள் வளர்ப்பை என்ன நினைப்பார்கள் என கேட்பார்கள்.
என்னதான் கேட்டாலும் அவர்களுக்கு சில பழக்கங்களை கைவிடுவது கஷ்டமாக இருக்கும். உட்கார்ந்த நிலையில் கால்களை ஆட்டுவது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இப்படி கால் ஆட்டுவதற்கு மன அழுத்தம், பதற்றம் போன்றவை காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இதை தவிர சரியான தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவை சிலருக்கு கால்களை அசைக்க காரணமாகின்றன.

தொடர்ந்து தூங்காமல் இருப்பவர்கள் அல்லது குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாகவே கால் ஆட்டும் பழக்கம் உள்ளதை பார்க்க முடியும். இந்த பழக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி பலரையும் வாட்டி வதைக்கிறது. அது இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால் ஏற்படலாம் என்று பல மருத்துவர்கள் சொல்கிறார்கள். இரும்புச் சத்து மாத்திரைகளைச் சரியாகச் சாப்பிட்டால் இந்த பிரச்சினையைக் குறைக்கலாம்.
அது மட்டும் அல்லாமல் வாழைப்பழம் , பீட்ரூட்டையும் இரும்புச் சத்து மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது நல்ல பலன் கிடைக்கும். இந்த நேரங்களில் டீ, காபி குடிக்கும் பழக்கம் கூட நல்லதுதானாம். ஆனால் இதோடு சேர்த்து இரவில் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது, டிவி பார்ப்பதைக் குறைத்து நன்றாக தூங்க வேண்டும். இவ்வாறு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications