சம்மரில் மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகம்! யாரெல்லாம் கவனமாக இருக்கனும்? லிஸ்ட் போடும் மருத்துவர்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வெயில் காரணமாக மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.
வானிலை: தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை.
வெயில்: நேற்று மட்டும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக சேலத்தில் 107.42, திருப்பத்தூரில் 107.24 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 106.7, திருத்தணியில் 106.16, வேலூரில் 105.98, நாமக்கல்லில் 104, திருச்சியில் 103.46 என வெயில் பதிவாகியுள்ளது.
எச்சரிக்கை: அதேபோல மே 1ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மாரடைப்பு: வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள இதய நோய் மருத்துவர் ஷாலினி மணி, "சாதாரண காலங்கங்களை விட இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே, இயல்பாகவே அழுத்தம்(Stress) அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகரித்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
யாருக்கு பாதிப்பு?: மற்ற எல்லோரையும் விட ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதேபோல உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, உடல் பருமன் அதிகமான இருப்பவர்களுக்கு, ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வெயில் காலத்தில் மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
என்னென்ன சாப்பிடலாம்?: ஏற்கெனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த ஓட்டம் சீராக இருக்க சில மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மட்டுமல்லாது உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் எடுத்துக்கொள்ளும் அளவை சீராக வைத்திருக்க வேண்டும்.
கோடை காலத்தில் ஏன் மாரடைப்பு?: கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இந்த உஷ்ணத்தை குறைக்க ரத்தத்தில் உள்ள நீர் வியர்வையாக சுரக்கும். ஆனால், இந்த வியர்வை அதிக வெப்பத்தால் உடனே ஆவியாகிவிடும். இதன் காரணமாக ரத்தம் திக்காக(thick) மாறிவிடும். அதை உடல் முழுக்க கொண்டு செல்ல இதயம் வழக்கத்தை விட கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே, மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது. கோடையில் மாரடைப்பு வர முக்கிய காரணம் இதுதான்.
அறிகுறிகள்: படிக்கட்டுகள் ஏறும்போதும், அதிக பளுவான பொருட்களை தூக்கும் பொதும், சாப்பிட்ட உடனேயும் இதயம் வேகமாக துடிக்கும். இந்த நேரத்தில் நெஞ்சுவலி, நெஞ்சு மீது யாரோ அழுத்துவதை போன்ற உணர்வு, நெஞ்சிலிருந்து வலி கைகளுக்கும், தோள்பட்டைக்கும், தவடைக்கும், முதுகுக்கும் பரவும் போது நாம் உஷாராக இருக்க வேண்டும். அதேபோல நெஞ்சுவலி வரும்போது வாந்தி வருவது, அதிகம் வியர்த்தல், மயக்கம் வருதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள்.
இதில் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு குறித்த அறிகுறிகள் தெரியாது. ஏனெனில், சர்க்கரை நோய் அவர்களுடைய நரம்பு மண்டலத்தை பாதித்திருக்கும். எனவே, மாரடைப்பு வலி தெரியாது. இவர்கள் முடிந்தவரை மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை ஈசிஜி பரிசோதனை மேற்கொள்வது நல்லது" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications