Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாய் துர்நாற்றம் வீசுதா! பல், ஈறுகளில் ரத்தக் கசிவா? தூக்கம் வரலையா? உடனே இதை எடுத்துகோங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் இரு மாதங்களில் கோடை காலம் தொடங்கிவிடும். இந்த காலத்தில் தண்ணீர் அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஆரஞ்ச் பழங்களை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஜூஸ் போட்டும் குடிப்பார்கள்.

 Dont eat Orange along with some foods

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பை அகற்றும் திறன் ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. மேலும் இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன்பு ஆரஞ்சு பழத்தை ஜூஸாக போட்டு குடித்து வருவது நன்மை தரும். இந்த ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அது போல் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. மலட்டுத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது போல் ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர் தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். இந்த பழம் ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தக்காளி: ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து உண்ணக் கூடாத சில உணவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது தக்காளி. இதுவும் ஆரஞ்சும் அசிடிக் உணவு பொருட்களாகும்.ஒரே நேரத்தில் இரு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும்.

தயிர்: அது போல் தயிரிலும் அமிலத்தன்மை இருப்பதால் அத்துடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதுவும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்துடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

மது, காபி: ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவிட்டு காபி குடித்தல், மதுபானம் குடித்தல் கூடவே கூடாது. இவற்றை செய்தால் வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். அது போல் பால் பொருட்களையும் ஆரஞ்சு பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+