கிருஷ்ணகிரியில் உச்சி வெயிலில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் பலியானது எப்படி? உடலில் நடந்த மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணகிரியில் வெயிலில் கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து இளைஞர் மரணமடைந்த சம்பவத்தில் நிகழ்ந்தது என்ன என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்சி வெயிலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.

Dr Farook Abdulla explains about Heat stroke

இது "வெப்ப வாதம்" எனும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் நிகழ்ந்த மரணம் என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் கோடை காலங்களில் வெப்ப அளவுகள் 40 டிகிரிக்கு மேல் நிலவுவது வழக்கமாக இருக்கிறது. வெளிப்புற சூழ்நிலையில் பணி புரிபவர்கள் மற்றும் கோடை கால விடுமுறையில் வெளிப்புறங்களில் உச்சி வெயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாடுவதையும் காண முடிகிறது.

இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்தின் விளைவாக வெளிப்புற சூழ்நிலையில் உடல் சூடு அதிகமாகி வெப்ப வாதம் ஏற்பட்டு மருத்துவ ரீதியான அவசர சூழ்நிலை ஏற்பட்டு முறையான கவனிப்பற்ற நிலையில் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதீத வெயிலில் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள், கட்டாயமாக இருசக்கர வாகனங்களில் வெயிலில் பணிநிமித்தம் பயணம் செய்ய வேண்டியிருப்பவர்கள் என பலரும் இந்த வெயிலோடு போராடி வருகின்றனர்.

இந்த வெயிலை சமாளிப்பதற்கு பாதிப்பில்லாமல் வெயிலில் பணிபுரிவதற்கு ஏற்றாற் போல உடற் தகுதியை நம்மால் அடைய முடியும். இதற்கு "வெப்பத்தை தாங்கும் பயிற்சி" ( ஹீட் அக்ளமடைசேசன்) அவசியம். உதாரணத்திற்கு ஒருவர் நல்ல வெயிலில் தினமும் நான்கு மணிநேரம் விளையாடவோ, பணிபுரியவோ, பயணம் செய்யவோ வேண்டும் என்றால் அவர் நேரடியாக எந்த முன்பயிற்சியும் இல்லாமல் நான்கு மணிநேரம் விளையாடுவாரானால் வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப வாதத்திற்கு உள்ளாகி பாதிப்புக்குள்ளாவர்.

அவர் எவ்வாறு வெப்பத்திற்கு தனது உடலைப் பழக்குவது? இதற்கு அவர் குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் கடும் வெயில் சூழ்நிலையில் மொத்தம் பணிபுரிய வேண்டியது ஐந்து மணிநேரம் இதை 100% என்று கொள்ளவும். முதல் நாள் 20% நேரம் மட்டும் அதாவது ஒரு மணிநேரம் மட்டும் தனது பணியை கடும் வெயில் சூழலில் செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு நீர் மற்றும் உப்புச் சத்து நிரம்பிய ஓ ஆர் எஸ் ( உப்புக் கரைசல்) பருக வேண்டும். உணவை முறையாக உண்ண வேண்டும். இரண்டாம் நாள் 40% -இரண்டு மணிநேரம் என்ற அளவில் வெயிலில் பணிநேரத்தை உயர்த்த வேண்டும். அதற்குப் பிறகு ப்ரேக் எடுக்க வேண்டும். மூன்றாவது நாள் 60% நேரம் அதாவது மூன்று மணி நேரம் என்ற அளவில் வெயிலில் வேலை செய்ய வேண்டும்.

நான்காவது நாள் 80% நேரம் அதாவது நான்கு மணிநேரம் என்ற அளவில் வெயிலில் வேலை செய்ய வேண்டும். ஐந்தாவது நாள் தான் பணிபுரிய வேண்டிய ஐந்து மணிநேரமும் 100% வேலை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நமது உடல் முறையாக சிறுகச் சிறுக அதீத வெப்பத்திற்கு பழக ஆரம்பித்து விடும். இவ்வாறு பழக்கம் ஏற்பட்ட பின் வெப்பத்தால் அயர்ச்சி ஏற்படுவதும் வாதம் ஏற்படும் வாய்ப்பும் குறையும்.

இவ்வாறு வெப்பம் தாங்குவதற்கு பழகிய பின் தொடர்ந்து இதே போன்று வெயிலில் பணிபுரியலாம். எனினும் இடையே ஒரு வாரத்திற்கு மேல் வெயிலில் பணிபுரியாமல் இருந்தால் இந்த வெயில் தாங்கும் நிலை கைவிட்டுப் போய் விடும். ஒரு மாத காலம் வெயிலற்ற நிலையில் பணிபுரிந்தால் இத்தகைய பயிற்சியினால் கிடைத்த வெப்பம் தாங்கும் சக்தி சுத்தமாக இல்லாமல் போய்விடும்.

மீண்டும் இதே போன்று சிறுகச் சிறுக பயிற்சி எடுத்து வெப்பம் தாங்கும் சக்தியை வளர்த்துக் கொண்டு பிறகு கடினமான சூழ்நிலையில் வெப்பத்தில் பணிபுரிய வேண்டும். இந்த கட்டுரை வழியாக நான் கூறவரும் செய்தி அதீத வெப்பமான சூழ்நிலையில் அதைத் தாங்கும் பயிற்சியை சிறுகச் சிறுகப் பெறாமல் நேரடியாக அதீத வெப்பத்தில் நீண்ட நேரம் பணிபுரிவது / பயணம் செய்வது / விளையாடுவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம்.

நீர் அருந்துவது ஓ ஆர் எஸ் திரவம் அருந்துவது நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை சேர்த்துக் கொள்வது முக்கியம். விழிப்புணர்வு பெறுவோம். அதீத வெப்பத்தினால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்போம். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+