பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு என்ன ஆயிற்று? மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட காரணம் என்ன? டாக்டர் விளக்கம்
சென்னை: பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏற்பட்ட ரத்தக் கசிவு எதனால் ஏற்பட்டது, அதை சரி செய்வது எப்படி என்பதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
லண்டனில் இசைக் கச்சேரிக்கு சென்றிருந்த பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவர் ஹோட்டல் அறையில் மயங்கி விழுந்திருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்த பிரச்சினைக்கு பாம்பே ஜெயஸ்ரீக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாம்பே ஜெயஸ்ரீ
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த 59 வயதான பிரபல தமிழ் திரைப்பட பிண்ணனி பாடகியும் கர்நாடக சங்கீத இசையில் விற்பன்னருமான பாம்பே ஜெயஸ்ரீக்கு
மூளையில் அநியூரிசம் ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

ரத்த நாளங்கள்
அநியூரிசம் என்றால் என்ன? ரத்த நாளங்களின் சுவர்களில் ஸ்திரத்தன்மை இழந்து பலூன் போல சில இடங்களில் பெரிதாக ஆவது "அநியூரிசம் " என்று அழைக்கப்படுகிறது. அநியூரிசம் பெரும்பாலும் மகா தமனியில், மூளையில், முழங்காலுக்குப் பின் பகுதியில்,
குடல் பகுதியில், மண்ணீரல் பகுதியில் ஏற்படக் கூடும்.

யாருக்கு பாதிப்பு
யாருக்கு அநியூரிசம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ?
- கட்டுப்படுத்தப்படாத ரத்தக் கொதிப்பு
- கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு
- முதியோர்
- பெண் பாலினத்தில் மூளையில் அநியூரிசம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்
- மது மற்றும் புகை பழக்கம் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம்
- ஏற்கனவே குடும்பத்தில் இதே பிரச்சினை ஏற்பட்டவர்கள்
- சிறுநீரகம் சார்ந்த நோய்கள் இருப்பவர்களுக்கு குறிப்பாக பாலிசிஸ்டிக் கிட்னி நோய் இருப்பவர்கள்
- மூளையில் சிரை மற்றும் தமனியின் உருவாக்கத்தில் கோளாறுகள்

அறிகுறிகள் என்ன
அநியூரிசம் இருப்பின் அறிகுறிகள் என்ன?
- தலைசுற்றல்
- மயக்கம்
- வாந்தி குமட்டல்
- பார்வை மழுங்குவது
- பார்வை ரெண்டாகத் தெரிவது
- இதயத்துடிப்பு அதிகமாவது
- மூச்சுத் திணறல்
- நெஞ்சுப் பகுதியில் அதீத வலி
- வலிப்பு அடிக்கடி ஏற்படுவது
- மயக்க நிலை
போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.

அநியூரிச சீரமைப்பு
தொடர்ந்து அநியூரிசம் சரி செய்யப்படாமல் போனால்
அநியூரிசம் வெடித்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடும். இது மருத்துவ அவசர நிலையாகும்.
உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து
ரத்த நாள அநியூரிச சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும். இது போன்ற வெடிப்பு ஏற்படும் முன்னரே அறிந்து அறுவை சிகிச்சை செய்வது சிகிச்சையின் வெற்றியை பன்மடங்கு உயர்த்தும்.

சிகிச்சை என்ன
- அநியூரிசம் ஏற்பட்ட ரத்த நாளத்தில் ஸ்டெண்ட் வைப்பது
- அநியூரிசம் ஏற்பட்ட பகுதியை நீக்கி விட்டு பைபாஸ் கிராப்ட் வைப்பது
- எண்டோவாஸ்குலார் காய்லிங் ( ரத்த நாளத்துக்குள் சுருள் வைக்கும் அறுவை சிகிச்சை )
- க்ளிப்பிங் அறுவை சிகிச்சை
போன்றவை செய்யப்படும். அநியூரிசத்தை தவிர்க்கவும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையை அடையாமல் இருக்கவும் இன்றே உங்களது ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்கவும். நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் . மது / புகை பழக்கத்தை உடனே கைவிடவும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications