வாரத்திற்கு 90 மணி நேர வேலை! எல் அன்ட் டி நிறுவனத் தலைவர் பேச்சை கேட்டால்.. டாக்டர் விளக்கம்
சென்னை: ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் உழைப்பதற்கே சுகர், பிபி, கொலஸ்ட்ரால் என நோய்கள் வரிசை கட்டி நிற்கின்றன. வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்தால் என்ன ஆகுமோ என சிவகங்கை அரசு மருத்துவமனை பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: ஓய்வு நாள் இல்லாமல் தினசரி 13 மணிநேரங்கள் வேலை செய்தால் நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும் என்ற கருத்துகளை தொழிலதிபர்கள் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் பெரும் வெற்றி பெற்றவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

இப்போதும் நம் நாட்டில் சுய தொழில் நடத்தி வரும் பெரும்பான்மை மக்கள், அது காய்கறி, டீ கடை, பரோட்டா கடை, பேக்கரி, பானி பூரிக் கடை, பால்காரர்கள் முதல் ஜவுளிக் கடை, பலசரக்குக் கடை என தனியார் நடத்தும் சிறு தொழில், குறு தொழில் நிறுவனங்களில் அவரவர் உழைப்பு என்பது 12 மணிநேரங்கள். வார விடுமுறை பெரிதாக இல்லாமல் உழைத்து வருகின்றனர்.
அடுத்து ஐடி உள்ளிட்ட சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் துறைகளில் தற்போது தினசரி ஒன்பது முதல் பத்து மணிநேரங்கள் சைன் இன் மற்றும் சைன் அவுட்டுக்கு இடைப்பட்ட நேரமாக இருக்கிறது. வார இறுதியில் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதால் வாரம் 48 மணிநேரம் வேலை என்பதை இவ்வாறு தினசரி 9 முதல் 10 மணிநேரங்கள் என்று உழைத்து ஈடு செய்கின்றனர் ஐடி ஊழியர்கள்.
சராசரி பணிபுரியும் நேரம் 10 மணிநேரம் என்று இருந்தாலும் அந்தந்த ப்ராஜக்ட் மற்றும் க்ளையண்ட் தேவை பொருத்து இந்த பணி புரியும் நேரம் என்பது இன்னும் சற்று நீள்கிறது என்பதே உண்மை. இது ஊழியர்களுக்கான நேரங்கள், முதலாளிகளுக்கானதோ அல்லது சி ஈ ஓக்களுக்கானதோ அல்ல..
அவர்கள் இதை விட இன்னும் அதிகமான உழைப்பைக் கூட தினசரி போடலாம். அல்லது தொழிலாளிகளிடம் உழைப்பை வாங்கிக் கொண்டு அவர்கள் தங்களுக்கான ஓய்வு நேரத்தை அனுபவிக்கலாம். அதற்கான சாய்ஸ் அவர்களிடம் உண்டு. ஆனால் தொழிலாளர்களுக்கு அத்தகைய சாய்ஸ் இல்லை.
பெரு முதலாளிகள் சிஈஓக்கள் லாப நோக்கில் தங்களது நிறுவனத்துக்காக இராப்பகல் பாராமல் உழைப்பதாகவும் இதே போன்று தொழிலாளர்களும் உழைக்க வேண்டும். அப்போது தான் நிறுவனமும் முன்னேறும், நாடும் முன்னேறும் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
எனினும் இங்கு தொழிலாளர்களின் நிலை என்ன? தினமும் எட்டு மணிநேர உறக்கம், எட்டு மணிநேர உழைப்பு, எட்டு மணிநேர ஓய்வு
இதுவே சிறந்த மாடல். கணினித் துறையோ உடல் உழைப்பைக் கோரும் துறையோ அது எதுவாயினும் மனிதனுக்கு தினசரி எட்டு மணிநேர உறக்கம் கட்டாயம் தேவை.
எட்டு மணிநேர உழைப்பு என்பது தரத்துடன் இருக்க வேண்டுமெனில் மனிதனுக்கு எட்டு மணிநேர உறக்கம் தேவை. கூடவே எட்டு மணி நேர ஓய்வும் அவசியம். ஓய்வு என்றால் சும்மா இருப்பதில்லை. அப்போது தான் குடும்பம் பிள்ளை மனைவியை கவனிக்க முடியும்.
அவனுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்ய முடியும் . வாக்கிங், உடல் பயிற்சி செய்ய முடியும் . சமூகம் சார்ந்த விஷயங்களில் பங்களிப்பு செலுத்த முடியும் . ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சிந்தித்து செயலாற்ற முடியும். இது அனைத்துக்கும் தான் இந்த மீதி எட்டு மணிநேரங்கள் . எனினும் இந்த எட்டில் சில பகுதியை வீட்டிற்கு பயணம் செய்யும் நேரமே பல இடங்களில் தின்று விடுகிறது.
இந்த ஓய்வு - எட்டு மணி நேரங்களை ஒரு மனிதன் சரியாக உபயோகிக்கும்போது தான் அவனது குடும்பம் சீராக இயங்குகிறது.
குடும்ப நேரம் , ஓய்வு நேரம், உறக்க நேரம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு உழைப்பு உழைப்பு என்று திணிப்பது நியாயம் ஆகுமா?
பணம் தேவை தான் இப்போது நமக்குத் தேவையான உடை , உறையுள் , உணவு என அனைத்துக்கும் பணம் தேவை தான் . ஆயினும்
உடல் ஆரோக்கியம், மன நலன், சமூக நலன் குடும்பத்தின் நலன் ஆகியவற்றை பணத்தால் மட்டுமே நாம் அடைந்து விட முடியாது. இப்போது இருக்கும் வாழ்க்கை முறைக்கே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு , இதய நோய், சிறுநீரக நோய் , மனச் சோர்வு, உடல் பருமன்
விவாகரத்துகள் என்று அதிகரித்து வருகின்றன.
எப்போதும் போல எட்டு - எட்டு - எட்டு மாடல் கூடவே வாரம் 48 மணிநேரம் உழைப்பு என்ற அளவை மிகாமல் இருப்பதும் நலம். என்றும் தொடர்வதே நமது உடல் - மன - சமூக ஆரோக்கியத்துக்கான சரியான மாடலாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications