3 நாட்கள் காய்ச்சல்! டெங்கு நெகட்டிவ்! ஆனாலும் கருப்பான மலம் கழித்த 3 வயது குழந்தை! பெற்றோரே உஷார்!
சென்னை: சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்த மூன்றரை வயது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இல்லை, ஆனாலும் அவருடைய மலம் கருப்பாக வந்தது ஏன் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் மூன்றரை வயது பெண் குழந்தைக்கு
தொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல் கூடவே வாந்தி, பரிசோதித்ததில் சீசனல் ஜூரம் என்று கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை பரிந்துரைத்து அனுப்பினேன்.

மறுநாள் குழந்தையின் அம்மா "காய்ச்சல் சரியாகிடுச்சு சார்.. பாப்பா மோஷன் கருப்பா போறா சார். பயமா இருக்கு.. அதான் கூட்டிட்டு வந்தேன்" காய்ச்சல் மூன்று நாட்களாக இருந்து நான்காவது நாள் குணமாகி கூடவே மலம் கருப்பாகச் சென்றால் நம்ம புத்தி நேராக டெங்குவுக்குத் தான் செல்லும். பரிசோதனை செய்தேன்.
பாப்பா நன்றாக இருந்தார். வாந்தி குணமாகி இருந்தது. வயிற்று வலி இல்லை. ஆனாலும் மலம் கருப்பாக் செல்கிறது. டெங்குவில் முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும். அதற்குப்பிறகு காய்ச்சல் குணமாகி விடும். ஆனால் அப்போது தான் பிரச்சனைக்குரிய நாட்கள் ஆரம்பமாகும்.
தட்டணுக்கள் குறையத் துவங்கும்.
ரத்த உறைதலில் பிரச்சனை ஏற்படும். ரத்த நாளங்களுக்குள் நீர் இருப்புக் கொள்ளாமல் வெளியேறி வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் சேர்ந்து கொள்ளும். மலத்தில் ரத்தம் வெளியேறுவதால் கருப்பாகச் செல்லும். இதை மெலீனா என்று கூறுவோம். குழந்தை பரிசோதனை செய்ததில் சற்று தேறி இருந்தாள். எனினும் குழந்தை என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
எதற்கும் சோதனை செய்து பார்த்து விடுவோம் என ரத்த அணுக்கள் சோதனை செய்தேன் . அனைத்தும் நார்மல். மலத்தில் ரத்தத்தைப் பரிசோதிக்கும் அக்கல்ட் ப்லட் பரிசோதனையும் நெகடிவ். நான் டெங்கு எலிசா பரிசோதனை கேட்கவில்லை. ஆனால் குழந்தையின் அம்மாவே தானாகக் கூறி டெங்கு பரிசோதனையும் சேர்த்தே செய்து வந்து விட்டார்.
அதுவும் நார்மல். இந்த டெஸ்ட்களையெல்லாம் காட்டி விட்டு குழந்தையையும் என்னிடம் காட்டி விட்டுப் போக வந்திருந்த போது குழந்தை முரண்டு பண்ணி அழுது கொண்டே இருந்தது. அப்போது தாய் குழந்தையிடம் "அமைதியா இரு பாப்பா.. சமத்தா இருந்தா உனக்கு இன்னைக்கும் பிரவுனி கேக் வாங்கித் தருவேன்" என்றார்.
நான் கேட்டேன் "பிரவுனி கேக்கா?" "ஆமா சார். இவளுக்கு புடிச்ச கேக்" "பிரவுனி கேக் சாப்ட்டா மோஷன் கருப்பா போகும் மா. அதுல கருப்பு நிறத்த கொண்டு வர்றதுக்காக நிறமிகள் சேர்ப்பாங்க. அதுனால மோஷன் கருப்பா போயிருக்கு. தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு கருப்பு கலர் கேக் கொடுக்காதீங்க. மோஷன் நார்மல் கலருக்கு வந்துடும்"
என்றேன்.
கருப்பா மோஷன் போனா அக்கல்ட் ப்லட்டா தான் இருக்கணும்னு இல்ல, பிரவுனி கேக்காகவும் இருக்கலாம்... மிலீனியம் மதர்ஸ்
காய்ச்சல் கார பேபீஸுக்குக் கூட பிரவுனி கேக் வாங்கிக் கொடுத்து நம்மள சுத்தல்ல விடுறாங்கம்மா... இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது போன்று உடல்நிலை சரியில்லாத நேரங்களில் ஜங்க் உணவுகளை வாங்கிக் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் உபாதைகள் எதனால் ஏற்பட்டது என்பது தெரியவரும். எனவே குழந்தைகள் அடம்பிடித்தாலும் காய்ச்சல், சளி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளின் போது வெளி உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications