குழந்தைகளை கண்ணு மண்ணு தெரியாமல் அடிப்பவர்களா நீங்கள்?.. அப்ப முதல்ல இதை படிங்க!
சென்னை: குழந்தைகள் தவறு செய்தால் எப்படியெல்லாம் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கிளினிக்கில் 9 வயது சிறுமி அவளது தாய் மற்றும் அப்பத்தாவுடன் சந்திக்க வந்திருந்தார். சிறுமிக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் , சளி , இருமல் , தொண்டை வலி.
அப்பத்தா கூறுகிறார் " மூனு நாளைக்கு முன்னாடி இவள இவுங்க அம்மா ரொம்ப அடிச்சுப்புட்டா.. அதுக்கு அப்பறம் இருந்து தான் காய்ச்சல் ஆரம்பிச்சது" நான் சிறுமியின் அம்மாவிடம் "மூனு நாளைக்கு முன்னாடி அடிச்சீங்களா மா?" "ஆமாங்க சார்.. ரொம்ப சேட்டை.. சரியா படிக்க உட்காருறதில்ல.. பேச்சுக்கு மறு பேச்சு .. எதிர்த்து பேசுறது.. வா போனு மரியாதை இல்லாம பேசுறது.. அதனால அடிச்சேன் சார்"

நான் சிறுமியை பரிசோதனை செய்து விட்டு தொண்டைப் பகுதியில் தொற்று இருப்பதும் அதனால் ஏற்பட்ட காய்ச்சல் என்றும் அடையாளம் கண்டு அதற்குரிய பரிந்துரையை எழுதிக் கொண்டே "சளி இருமல் காய்ச்சல் மா இது. தொண்டைல புண்ணாகிருக்கு. மருந்துகள் கொடுத்துருக்கேன். கஞ்சி, இட்லி, இது மாதிரி லைட்டா சாப்ட கொடுங்க.."
"இவுங்க அம்மா அடிச்ச உடனே தான் சார் காய்ச்சல் வந்துடுச்சு.. பல வருசமா நல்லா இருந்த புள்ள சார்" என்றார் அப்பத்தா ( மாமியார்) இப்போது அம்மா ( மருமகள்) " சார்.. இவுங்க டெய்லி அவளுக்கு காசு குடுக்குறாங்க.. அவ டெய்லி ஐஸ் வாங்கி சாப்புட்றா.. அதனாலதான் சார் தொண்டைல பிரச்சனை வருது" நான் மாமியாரிடம் "நீங்க ஏன்மா திண்பண்டம் நீங்க வாங்கிக் குடுக்காம கைல காசு கொடுக்குறீங்க.. பேத்தி கடைக்கு போய் என்ன வாங்கி சாப்புட்றானு கட்டாயம் பாருங்க.. மிட்டாய்கள் / இனிப்புகள் / சிப்ஸ்கள் விக்குது. ஐஸ் தினமும் சாப்ட்டா தொண்டைல சதை வளரும் இது நல்லதில்ல"
உடனே மாமியார் " சரிங்க சார்.. ஆனா இவளோட அம்மா இவள அடிக்கிறேன்னு அளவு மீறி போறா சார். அன்னைக்கு. கோவத்துல கழுத்த பிடிச்சு அப்டியே தூக்குறா சார். பிள்ளை கதறிடுச்சு பாவம்" நான் மருமகளிடம் "ஏன்மா .. கழுத்த பிடிச்சா தூக்குனீங்க. இவ என்ன வாத்து மாதிரியா தெரியுது உங்களுக்கு" "ஆமா சார் கொஞ்சம் அதிகமா கோபப்படுத்திட்டா அதான்"
"என்னம்மா ஈசியா சொல்றீங்க ? இதே விசயத்த ஐரோப்பிய நாடுகள்ல பண்ணிருந்தா ஜெயிலுக்குள்ள இருந்துருப்பீங்க இந்நேரம்..
இங்க நம்ம நாட்டுல இது பற்றிய விழிப்புணர்வு கம்மியா இருக்கு. குழந்தைகள வளர்க்கும் போது பெற்றோர்கள் கொஞ்சம் அப்பப்ப கடுமை காட்டணும் தான். முழுசா செல்லம் கொஞ்சியே வளர்க்க முடியாது தான். அவ்வப்போது பெற்றோர் லேசாக கண்டித்து வளர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாம கண்டிக்கிறதோட நோக்கம் - குழந்தைகள நல்வழிப்படுத்த மட்டுமே இருக்கணும்.
சில நேரங்கள்ல நம்ம ஆழ் மனசுல இருக்கிற கோபம் , கையாளாகாததனம் , வேற ஒரு இடத்துல வெளிப்படுத்த முடியாத கோபம் இதெல்லாம் வெளிப்படுத்துறதுக்கு ஈசியான டார்கெட்டா "பிள்ளைங்கல" பார்க்குறோம் அது தப்பு... வன்முறை எப்போதும் தீர்வு ஆகாது. குழந்தைகளை நல்வழிப்படுத்த கூட கோபத்தை கட்டுக்குள் இருந்து தான் வெளிப்படுத்தணும். அது குழந்தைகளை நல்வழிப்படுத்த மட்டுமே தவிர நமது வன்முறையை பிரயோகப்படுத்த அல்ல.
நீங்க கழுத்த பிடிச்சு தூக்கி பிள்ள செத்து போச்சுனா என்ன பண்ணுவீங்க.. உங்களுக்கு மனநலன்ல பிரச்சனை இருக்குமா.. மனநல மருத்துவர் கிட்ட சிகிச்சை எடுக்குறது உங்களுக்கும் பிள்ளைக்கும் நல்லது.." குழந்தை வளர்ப்பில் காட்டப்படும் கண்டிப்புக்கும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வன்முறைக்கும் வித்தியாசம் உண்டு இதை நாம் உணர வேண்டும்.
வளைந்த செடியை நேராக்கி கட்டுகிறேன் பேர்வழி என்று ஒரே அடியாக உடைத்து விடக்கூடாது. கோபத்தை அடக்க இயலாதவர்கள் கோபத்திற்கு வடிகாலாக வன்முறையை பிரயோகிப்பவர்கள் கட்டாயம் மனநல சிகிச்சை மற்றும் மனநல ஆலோசகரின் ஆற்றுப்படுத்துதலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications