அக்கேஷனல் டிரிங்கர்! எப்பயாச்சும் மது குடிக்கிறீர்களா? அப்ப பாதிப்பு அதிகம்.. மருத்துவர் அட்வைஸ்
சென்னை: எப்போதாவது மது குடிப்பவர்கள் என கூறிக் கொள்ளும் நபர்கள் , தினமும் குடிக்கும் நிலைக்கு மாறிவிடுவார்கள் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மது - தீமைகளுக்கெல்லாம் தோற்றுவாய் என்பதற்கு தற்கால செய்திகளே சான்று. மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து சித்ரவதை செய்த கணவனைக் கொன்ற மனைவி,
மது போதையில் பாட்டியிடம் உடலுறவு கொண்ட பேரன், சிறுமியைக் கற்பழித்த வாலிபர் , மது குடிக்க வைத்து இளம்பெண்ணைக் கற்பழித்த வாலிபர்கள், மது போதையில் மருத்துவமனையைச் சூறையாடிய ஆசாமி இப்படி நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கல்லூரி செல்லும் வாலிபர்கள் முதல் பள்ளி சிறார் வரை தினக்கூலிகள் முதல் கார்பரேட் ஊழியர்கள் வரை சிறு குறு வியாபாரிகள் முதல் பெருந்தொழிலதிபர்கள் வரை, இந்தத் துறையினர் தான் விதிவிலக்கு என்றில்லாத வகையில் மது வியாபித்திருக்கிறது. மதுவைப் பொருத்தவரை இன்று வருடத்தின் ஏதோ ஒரு நாள் குடி என்று இருப்பவர் ஆரம்ப நிலை குடிகாரர்.
தினமும் மூன்று வேளையும் குடிப்பவர் - முற்றிய நிலை குடிகாரர். இந்த இரு நிலைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது போல உங்களுக்கு தோன்றும். ஆனால் உண்மையில் வருடத்தின் ஒரு சில நாள் குடித்துக் கொண்டிருந்தவர் கூட அனுதினமும் குடிப்பவராக விரைவில் உருமாறலாம். அவர் வாழும் சூழ்நிலை குடிப்பழக்கத்துக்கு ஏதுவான நண்பர்கள் நல்ல பண வரத்து நெருங்கிய உறவினரின் பிரிவு அல்லது மரணம், தொழில் நட்டம் அல்லது அதீத லாபம் போன்ற பல விஷயங்களும் குடிக்கும் விகிதத்தை அதிகமாக்கி விடும்.
நாளடைவில் தனக்குத் தெரியாமலேயே எப்படி விட்டில் பூச்சி அகழ் விளக்கில் விழுகிறதோ, அது போல மதுவுக்கு அடிமையாகி குடிநோய்க்கு உள்ளாகி விடுவார். இன்றே குடிப் பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள். வருடத்தின் ஒரு சில நாள் தான் குடிப்பேன்.இழவு வீட்டில் தான் குடிப்பேன் , நல்ல காரியம் நடக்கும் வீடுகளில் குடிப்பேன் , செட் சேர்ந்தா குடிப்பேன், க்ளையண்ட் மீட்டிங்கில் குடிப்பேன், கஸ்டமர்களுக்காக குடிப்பேன் , கஷ்டமான வேலை , உடம்பு வலி தீர கொஞ்சமா குடிப்பேன் - இப்படி குடிப்பதற்கு காரணங்கள் உருவாக்கிய காலம் போய் காரணமே இல்லாமல் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை மூன்று வேளையும் குடிப்பழக்கத்தில் சிக்கி வாகன விபத்துகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வேலையிழப்பு, விவாகரத்து, தற்கொலை போன்ற பல சமூக விரோத செயல்கள் அரங்கேறக் காரணமாக மது இருக்கிறது.
பள்ளிகள் தோறும் நடுநிலைப் பள்ளிகளின் ஆரம்பம் தொடங்கி மதுவினாலும் கஞ்சா, புகையிலை போன்றவற்றால் ஏற்படும் தீமைகளை தொடர்ந்து வகுப்பாசிரியர்கள் பாடம் நடத்தி வர வேண்டும். மீண்டும் கூறுகிறேன் . இன்றே மதுவில் இருந்து விடுபடுங்கள். உங்களையும் உங்களின் குடும்பத்தையும் காக்கும் செயலாக அது அமையும்.
அதை விடுத்து நான் எப்போதாவது தான் குடிப்பேன் என்று சாக்கு கூறுபவராக நீங்கள் இருப்பீர்களாயேனால் ஒரு நாள் உங்கள் தலையெழுத்தையும் மது மாற்றி அமைக்கக் கூடும். அதற்குப் பின் வருந்திப் பலனில்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications