நடக்கும் போது ஒரு பக்கமாக சாய்கிறீர்களா? பக்கவாதம் வர வாய்ப்பு.. டாக்டர் பரூக் அப்துல்லா வார்னிங்
சென்னை: தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறயிருக்கையில், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் தங்களின் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தத்தின் முக்கியமான அறிகுறியாக அடிக்கடி ஏற்படும் தலைவலி இருக்கிறது.

பலரும் தலைவலிக்கு பாராசிட்டமால் அல்லது வெறுமனே தைலங்களை பூசி வருவதைக் காண முடிகின்றது. சமீபத்தில் என்னை அடிக்கடி தலைவலி என்று சந்திக்க வந்த நபருக்கு ரத்த அழுத்தம் 200/110mm Hg என்று இருந்தது. அவரும் தினசரி மருந்தகத்தில் வலி நிவாரணி மாத்திரையும் இரவில் தினசரி பணி முடிந்ததும் "மதிமயக்கும் பழரசம்" அருந்தி உறங்கச் சென்றுவிடுவாராம்.
சில நாட்களுக்கு முன் வேலை முடிந்து வந்தவர் தலை சுற்றி கீழே விழுந்துள்ளார். தலைவலி, தலைசுற்றல், நடக்கும் போது தள்ளாட்டம், நடக்கும் போது ஒருபக்கமாக சாய்ப்பது போன்றவை ரத்தக் கொதிப்பின் அறிகுறிகளாகும். இவற்றை உதாசீனம் செய்யாமல் முறையான சிகிச்சை எடுப்பது சிறந்தது.
கவனிக்கப்படாத ரத்தக் கொதிப்பு இதயத்தின் அறைகளின் தசைகளில் வீக்கத்தையும் செயலிழப்பையும் ஏற்படுத்தி இதயத்தின் செயல்திறன் குறையக்கூடும். ரத்த நாளங்களின் உள்பக்க சுவரில் உள்காயங்களை ஏற்படுத்தி ரத்த நாள அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் இதய ரத்த நாள அடைப்பு ( மாரடைப்பு), மூளை ரத்த நாள அடைப்பு ( பக்கவாதம்) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அடிக்கடி தலைவலி, தலைசுற்றல், போன்றவற்றிற்கு முறையான மருத்துவ சிகிச்சை பெற்று ரத்தக் கொதிப்பு இருப்பின் அதைக் குறைத்து சரியாக பராமரிப்பது நன்று. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications