அது என்ன மெட்டபாலிக்கலி சேலஞ்ச்டு? என்னென்ன நோய்கள் ஏற்படும்? சிகிச்சை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளர்சிதை மாற்றம் சார்ந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அப்படி என்றால் என்ன என்பதை சிவகங்கை அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: உடல் ஊனமுற்றோரை உடல் ரீதியான சவால் கொண்டோர் (PHYSICALLY CHALLENGED) என்றும் கண் பார்வையற்றோரை பார்வை சவால் உடையவர்கள் ( VISUALLY CHALLENGED) என்றும் சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் திறன் குறைவாக இருப்பவர்களை மனநலம் சார்ந்த சவால் ( MENTALLY CHALLENGED) உடையவர்கள் என்றும் வழங்கி வருகிறோம்.

health dr farook abdulla diabetes

இதே போல வளர் சிதை மாற்றம் சார்ந்த சவால் கொண்டவர்களின் (METABOLICALLY CHALLENGED)எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது என்ன மெட்டபாலிக்கலி சேலன்ஞ்டு...?

உடல் பருமன்
ரத்தக் கொதிப்பு
சர்க்கரை நோய்
பிசிஓடி
ஃபேட்டி லிவர்
போன்றவை நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறால் விளையும் நோய்கள்.

குறிப்பாக இன்சுலின் எனும் ஹார்மோன் அதன் பணியை சரிவர செய்ய இயலாமையாலும் தேவைக்கும் அதிகமாக சுரக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுவதுமாக வறட்சி நிலையை அடைவதுமே இதன் முற்றிய நிலையாக உள்ளது. தமிழ்நாட்டில் மூவரில் ஒருவருக்கு உடல் பருமன் இருக்கிறது.

பத்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு ரத்தக் கொதிப்பு இருக்கிறது. மூவரில் ஒருவருக்கு கல்லீரல் நோய் ( ஃபேட்டி லிவர்) இருக்கிறது. வளர் இளம் பெண்களில் 30% பேருக்கு பிசிஓடி கண்டறியப்பட்டு வருகிறது. இவையெல்லாம் சுட்டுவது என்ன? மெட்டபாலிக்கலி சேலன்ஞ்டு மக்களுக்கான வாழ்வியல் மாற்றங்கள் இன்றைய நிலையில் கட்டாயத் தேவை.

உண்ணும் உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து உண்ண வேண்டும். இனிப்பு சுவை கொண்ட சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி ஆகியவற்றின் சகவாசத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் பழச்சாறுகள் அதிலும் சர்க்கரை கலந்த பழச்சாறுகளை நன்மை தருபவை என்று தினமும் பருகுவது நன்மையன்று. பழங்களே ஆயினும் வரம்பு முக்கியம்.

நீரிழிவு உடல் பருமன் பிசிஓடி மக்கள் - இனிப்பு மிகுதியான பழங்களைச் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது இன்னும் இவர்கள் டீ காபிக்கு ஏதாவது இனிப்பைக் கலந்து பருகி வருவது தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தினமும் அரை மணிநேரமேனும் வேகமான நடைப்பயிற்சி மெட்டபாலிசத்தின் இயக்கத்தை சற்று சூடுபிடிக்கச் செய்யும்.

எட்டு மணிநேர உறக்கம் என்பது எப்படி உணவு, உடல் பயிற்சி முக்கியமோ அதைப் போல இன்றியமையாதது. இவையன்றி திருமணமான மக்களுக்கு காமம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் இன்பம் என்பதும் மனநலம் மற்றும் உடல் நலனில் முக்கியப் பங்காற்றுகிறது.

எனவே உணவு உடை போன்று காமத்தையும் உடல் மற்றும் மனதிற்கான தேவையாகக் கருதிட வேண்டும். இன்னும் முக்கியமானது மனநலன், பலரும் மன அமைதியாக இருங்கள் என்றால் சிரிக்கிறார்கள். அது ஏதோ அடைய முடியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஆனால் மன அமைதியை திருப்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் சக உயிர்கள் மீது பொறாமை வஞ்சம் அற்று நன்றியுணர்வுடன் இருப்பது பிறருக்கு மரியாதை தந்து வாழ்வது தான் எனும் அகந்தையை குறைத்து வாழ்வதன் மூலமும் மிருக குணமான சினத்தைக் கட்டுப்படுத்தி நல்ல சொற்களைப் பேசி குடும்ப உறவுகளைப் பேணி வாழும் போது சம்பாதிப்பது குறைவாகினும் மன அமைதி கிடைக்கிறது. இதை பலரிடம் பேசி கிடைக்கும் அனுபவம் மூலம் உணர்வதால் கூறுகிறேன்.

மது, புகை, கஞ்சா, கூல் லிப் போன்ற போதை வஸ்துக்கள் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவித்து மரணத்தை சீக்கிரமே வரவழைக்கக் கூடியவை. எனவே இவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும். மேற்கூறிய மாற்றங்களை வாழ்வியலில் புகுத்தினால் வளர்சிதை மாற்ற சவாலை சமாளித்து அதில் வெற்றியும் பெற முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+